How to Ensure Your Child's Digital Safety Microsoft Tamil News: குழந்தைகளின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில உதவிக்குறிப்புகளை மைக்ரோசாஃப்ட் கொண்டு வந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பல குழந்தைகள் இன்னும் வீட்டில் இருப்பதால், பல டிஜிட்டல் கேஜெட்களுடன் நேரத்தைச் செலவிடுகின்றனர். குழந்தைகளின் டிஜிட்டல் வெளிப்பாடு மற்றும் பாதுகாப்பை நிர்வகிப்பது முக்கியம் என்று மைக்ரோசாஃப்ட் நம்புகிறது. எனவே, அவர்கள் வீட்டிலிருந்து கற்றுக் கொள்ளவும் விளையாடவும் பெற்றோருக்கு உதவக்கூடிய சில உதவிக்குறிப்புகளை நிறுவனம் வழங்கியுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் அறிவிக்கப்பட்ட குடும்ப பாதுகாப்பு பயன்பாடு பெற்றோர்களுக்கு நிச்சயம் உதவும்.
ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய குழந்தைகளுக்கான அட்டவணையை உருவாக்குவதுதான் மைக்ரோசாஃப்ட்டின் முதல் திட்டம். அதிக நேரம் திரையில் செலவிடுவதைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்துவது கடினம் என்பதால், குழந்தைகளுக்கான நேர வரம்பு அம்சத்தைப் பயன்படுத்தும்படி நிறுவனம் பெற்றோர்களைக் கேட்டுள்ளது. இந்த அம்சம் குழந்தைகளின் சாதனங்களில் நேரத்தைக் கட்டுப்படுத்தும். ஒவ்வொரு நாளும் தங்கள் குழந்தைகள் சாதனத்தில் எவ்வளவு நேரம் செலவிடவேண்டும் என்பதைப் பெற்றோர்கள் அமைக்கலாம்.
இது தவிர, பெற்றோர்கள் ஆரோக்கியமான சில எல்லைகளை நிர்ணயித்துக்கொள்ளலாம். குடும்பப் பாதுகாப்பு பயன்பாட்டின் உதவியுடன், எந்தவொரு உள்ளடக்கமும் பொருத்தமற்றதா அல்லது சந்தேகத்திற்குரியதா என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். குழந்தைகள் அறியாமல் பார்வையிடக்கூடிய தீங்கு விளைவிக்கும் வலைத்தளத்தையும் அவர்கள் தடுக்கலாம். நிறுவனத்தின் கூற்றுப்படி, சைபர் க்ரைம்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுசருடன் விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் எக்ஸ்பாக்ஸில் இது வேலை செய்கிறது. மேலும், சில பயன்பாடுகளையும் தடுக்கலாம்.
இறுதியாக, பெற்றோர்கள் செயல்பாட்டு அறிக்கைகளின் குறிப்பை வைத்திருக்க வேண்டும் என மைக்ரோசாஃப்ட் கூறியது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தை அதிக நேரம் செலவழிப்பது, எந்த சாதனத்தில் உள்ளது என்பதைச் சரிபார்க்க அனுமதிக்கும். அதன்படி, தேவைக்கேற்ப பயன்பாட்டு மாற்றங்களைச் செய்யலாம். செயல்பாடுகளைப் பொறுத்து பயன்பாட்டு நேரத்தையும் அதிகரிக்க முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"