கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் (Find My Device) செயலி பயன்படுத்தி தொலைந்து போன ஆண்ட்ராய்டு போனை கண்டுபிடிப்பது குறித்து பார்ப்போம்.
தொலைந்து போனை ட்ராக் செய்வது எப்படி?
முதலில் உங்களுடைய வேறு போன் அல்லது நண்பர்கள் போனில் ஃபைண்ட் மை டிவைஸ் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
இன்ஸ்டால் செய்த பின் தொலைந்து போன போனின் பெயரை குறிப்பிட்டு ‘Get Directions’ கிளிக் செய்யவும். போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் அதை கண்டறிய முடியும்.
உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட போனின் IMEI எண்ணைப் பார்க்க, அது செயல்படுத்தப்பட்ட தேதியுடன் ஃபோனின் வலதுபுறத்தில் தோன்றும் கியர் ஐகானை கிளிக் செய்யவும். இப்போது அங்கு factory reset ஆப்ஷன் இருக்கும் அதை கொடுக்கலாம். இது உங்கள் தொலைந்து போன போனில் உள்ள மொத்த டேட்டாவையும் டெலிட் செய்து விடும்.
உங்கள் டேட்டா, ஆவணங்கள் மற்றவர்களிடம் சென்று விடக் கூடாது, தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்று இருந்தால் நீங்கள் factory reset செய்யலாம். உங்கள் டேட்டா டெலிட் செய்து விடும். ஆனால் அதன் பின் நீங்கள் அந்த போனை ட்ராக் செய்ய முடியாது. எனவே யோசித்து செயல்படுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“