கூகுள் மேப்பில் லைவ் லொகேஷன் கண்டறிவதில் சிக்கலா? சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Fix Accurate Location on Google Map கூகுள் மேப்பில் உங்கள் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறியும் சில டிப்ஸ்களை இங்கே காணலாம்.

Fix Accurate Location on Google Map கூகுள் மேப்பில் உங்கள் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறியும் சில டிப்ஸ்களை இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கூகுள் மேப்பில் லைவ் லொகேஷன் கண்டறிவதில் சிக்கலா? சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Google Map tricks: 2005இல் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் மேப், பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.எந்தவொரு இடத்தையும் நீங்கள் கூகுள் மேப் பயன்படுத்தி எளிதாக கண்டறிய முடியும். அதேசமயம், கூகுள் மேப் மூலம் நாம் இருக்கும் இடத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

Advertisment

கூகுள் மேப்பில் உங்களுடைய லொகேஷன் நீல நிற புள்ளியில் காட்டும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் இருப்பிடத்தை கூகுள் மேப்பால் சரியாக கணிக்க முடியாவட்டால், நீல நிற புள்ளியை சுற்றி லைட் நீல நிறத்தில் வட்டம் இடம்பெற்றிருக்கும். அந்த லைட் நீல நிற வட்டத்திற்குள் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

அதேபோல், மேப்பில் நீல நிற புள்ளி அல்லது கிரே நிறத்தில் இருந்தால், உங்கள் இருப்பிடத்தை கூகுளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அர்த்தம். உங்களது பழைய லொகேஷனை காட்டிக்கொண்டிருக்கும். நீங்கள் பார்கிங்கில் இருக்கலாம் அல்லது பெரிய கட்டிடம் கீழ் இருக்கையில் நெட்வோர்க் சிக்கலில் கூகுளால் கண்டறிய முடியாமல் போகலாம். அத்தகைய நேரத்தில் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்டெபஸ் மூலம் இருப்பிடத்தை கண்டறியலாம்.

உங்கள் இருப்பிடத்தை கூகுள் மேப்பில் கண்டறிவது எப்படி

  • முதலில் ஆண்ட்ராய்டு போனில் கூகுள் மேப்பை ஓபன் செய்யுங்கள்
  • உங்கள் லொகேஷன் நீல நிற புள்ளியில் காட்டும். ஒருவேளை, நீல நிற புள்ளி இல்லையென்றால், கீழே வலதுபுறத்தில் Your location My location டேப் செய்யுங்கள்

இருப்பிடத்தை மேப் கண்டறிவது எப்படி?

Advertisment
Advertisements
  • GPS: உங்கள் இருப்பிடத்தை சுமார் 20 மீட்டர் வரை அறிய மேப் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், கட்டிடங்களுக்குள் அல்லது அண்டர்கிரவுண்டில் நீங்கள் இருக்கும்போது, ஜி.பி.எஸில் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படும்.
  • Wi-Fi: அருகிலுள்ள வைஃபை நெட்வொர்க்குகள் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை அறிய உதவுகிறது.
  • Cell tower: மொபைல் டேட்டாவுக்கான உங்கள் இணைப்பு சில ஆயிரம் மீட்டர் வரை துல்லியமாக கண்டறிய செல் டவர் உதவும்.
  • கூகுள் மேப்பில் உங்கள் இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக கண்டறிய, high accuracy mode பயன்படுத்த வேண்டும்.

லைவ் லொகேஷனை துல்லியமாக கண்டறிவது எப்படி?

  • உங்கள் ஆண்ட்ராய்டு போனில், Settings செல்ல வேண்டும்.
  • அங்கு Location கிளிக் செய்து, location on தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக Mode டேப் செய்து, High accuracy கிளிக் செய்ய வேண்டும்.

கூகிள் மேப்: இருப்பிட கண்டறிய சில டிப்ஸ்

  • ஸ்மார்ட்போனில் வைஃபை ஆன் செய்துகொள்ளுங்கள்.
  • ஸ்மார்ட்போனை ரிஸ்டார்ட் செய்துவிட்டு, முயற்சி செய்யுங்கள்
  • மேப்பில் நீல நிற புள்ள தவறான திசையில் இருந்தால், திசைகாட்டி திசையை சரிசெய்திட வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google Maps

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: