Advertisment

ஜிமெயில், பேஸ்புக் பாஸ்வேர்டு மறந்துடுச்சா? கூகுள் குரோமில் கண்டுபிடிக்க ஈஸி வழி

கூகுள் குரோம் மூலமாக சில வினாடியில் மறந்த பாஸ்வேர்டு கண்டுபிடிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து விரிவாக இங்கே காணலாம்.

author-image
WebDesk
Jun 06, 2022 14:40 IST
ஜிமெயில், பேஸ்புக் பாஸ்வேர்டு மறந்துடுச்சா? கூகுள் குரோமில் கண்டுபிடிக்க ஈஸி வழி

இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பேஸ்புக், ஜிமெயில், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பல்வேறு செயலிகளில் பயனர்கள் கணக்கு வைத்திருப்பார்கள். ஒவ்வொரு செயலிகளும் கடினமான பாஸ்வேர்டு வைத்திட பரிந்துரைக்கையில், ஏதற்கு என்ன பாஸ்வேர்டு வைத்தோம் என்பதை மறந்துவிடும் சூழ்நிலை ஏற்படும். ஒருவேளை, கணக்கு லாக் அவுட் ஆனால், மீண்டும் லாகின் செய்திட பாஸ்வேர்டு நமக்கு நியாபகம் இருக்காது.

Advertisment

பொதுவாக கணக்கை மீட்டெடுக்க forget password கொடுப்போம். அதன் செயல்முறை நீளமானது என்பதால் டைமாகும். ஆனால், கூகுள் குரோம் மூலமாக சில வினாடியில் எளிதாக பாஸ்வேர்டை கண்டுபிடிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து விரிவாக இங்கே காணலாம்.

கூகுள் குரோமில் உள்ள Autofill feature, நாம் லாகின் விவரங்களை சேமித்து வைத்து கொள்ளும். நீங்கள் முதல்முறை லாகின் செய்கையில், பாஸ்வேர்டு செவ் செய்துகொள்ளலாம் என்கிற நோட்டிபிகேஷன் திரையில் தோன்றும். நீங்கள் ஓகே சொல்லியிருந்தால் மட்டுமே, இந்த ட்ரிக் உங்களுக்கு கைகொடுக்கும்.

பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்

  • முதலில் குரோம் பரவுசரை டெஸ்க்டாப் அல்லது மொபைலில் ஓபன் செய்ய வேண்டும்.
  • பின்னர், டாப்பில் வலதுபுறத்தில் உள்ள Settings ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அங்கு, இடதுபுறம் ஓரத்தில் உள்ள Autofill ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், முதலில் இருக்கும் Passwords ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • தற்போது, கூகுள் குரோமில் ஸ்டோர் ஆகியிருக்கும் கணக்குகளின் பாஸ்வேர்ட் மறைக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றிருக்கும்.
  • உங்களுக்கு தெரிய வேண்டிய கணக்கின் பாஸ்வேர்டை காண, password visibility ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், அருகிலிருக்கும் மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து, ஐடி மற்றும் பாஸ்வேர்டை காப்பி செய்துகொள்ளலாம்.

குறிப்பு: நீங்கள் கூகுள் குரோமில் பாஸ்வேர்டு செவ் செய்யாவிட்டால், பார்வேர்டு மீட்டெடுக்க forget password தான் கொடுக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment