நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு சாதனத்திற்கும் தனித்தனியாக ஐபி முகவரி உள்ளது. வீட்டில், அலுவலகத்தில், ஏன் பாக்கெட்டிலே வைத்திருக்கும் ஸ்மார்ட்போனுக்கு தனி ஐபி முகவரி இருக்கிறது. ஆனால், அவற்றை நாம் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பில்லை. ஐபி முகவரியின் முக்கியவத்தவத்தையும், உங்களுடைய ஐபி முகவரியை கண்டறியும் வழியையும் இங்கே காணலாம்.
ஐபி முகவரி என்றால் என்ன?
Kaspersky கூற்றுப்படி, ஐபி முகவரி நெட்வோர்க்கில் உள்ள சாதனங்களுக்கு இடையே தகவலை அனுப்ப அனுமதிக்கும் அம்சம் ஆகும். அவை இருப்பிடத் தகவலைக் கொண்டிருக்கின்றன. வெவ்வேறு கணினிகள், ரவுட்டர்கள் மற்றும் இணையதளங்களை வேறுபடுத்திட ஐபி முகவரி உதவியாக உள்ளது.
எளிமையாகச் சொன்னால், IP முகவரி என்பது இணைய முகவரியைப் போன்றது. நெட்வோர்க்கில் இருக்கும் குறிப்பிட்ட சாதனத்தை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இதில் IP என்பது internet protocol ஆகும். அது, இணையம் வழியாக அனுப்பப்படும் தரவின் வடிவமைப்பை நிர்வகிக்கும் விதிகளின் தொகுப்பாகும்.
ஐபி முகவரி பார்மட் நான்கு டெசிமல் நம்பரை கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, 192.164.90.56 என்ற பார்மட்டை கொண்டிருக்கும்.
ஐபி முகவரின் முதல் பாதியான 192.164.50 என்பது network partஐ குறிக்கிறது. அதேபோல், இரண்டாவது பாதி 56 என்பது host partஐ குறிக்கிறது.
network part என்பது உங்கள் நெட்வொர்க்கிற்கு ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட எண்ணைக் குறிப்பிடுகிறது. நெட்வொர்க்கில் உள்ள இந்த சாதனங்களின் தனித்துவமான அடையாளம் காட்டுகிறது.
நெட்வொர்க்கில் உள்ள ஒவ்வொரு ஹோஸ்டுக்கும், முகவரியின் நெட்வொர்க் பகுதி ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் ஹோஸ்ட் பகுதி வேறுபட்டதாக இருக்க வேண்டும்.
நீங்கள் VPN பயன்படுத்தாமல் ஏதெனும் வெப்சைட்டை பார்த்தால், ஐபி முகவரி மூலம் எங்கிருந்து பார்க்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும். இதனை உபயோகித்து தான் உங்களது இருப்பிடத்தை கண்டறியும் வெப்சைட்கள், உங்கள் மொழி அல்லது பகுதி சார்ந்த தகவல்களை அளிக்கிறது.
Public vs Private IP addresses
பொது ஐபி முகவரி என்பது இணையத்தில் நேரடியாக அணுகக்கூடிய ஒன்றாகும். இந்த முகவரி பொது சாதனங்களுக்கு இணைய சேவை வழங்குநர் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் வீடுகளில் பயன்படுத்தப்பட்டும் வைஃபை நெட்வோர்க் தனிப்பட்ட ஐபி முகவரியை கொண்டுள்ளன. இவை ரவுட்டருக்கு மட்டுமே தெரியக்கூடும். நீங்கள் இன்டர்நெட் யூஸ் செய்கையில், மறைந்துவிடும்.
உங்கள் ஐபி முகவரி கண்டறிவது எப்படி?
வீடு அல்லது அலுவலகத்தில் லேன் நெட்வொர்க்கை நிறுவ விரும்பினால், உங்கள் ஐபி முகவரியை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். ஐபி முகவரியைக் கண்டறிய பல வழிகள் உள்ளன. அவற்றில் மிகவும் எளிமையானது, “What’s my IP?” என கூகுளில் தேடுவது தான். இது உங்கள் பொது ஐபி முகவரியை விரைவில் காண்பிக்கும்.
ஆனால், பிரைவட் ஐபி முகவரியை கண்டறிய, சில வழிகளை பின்பற்றியாக வேண்டும்.
விண்டோஸில் Settings சென்று, Network & Internet கிளிக் செய்தால், உங்கள் Wi-Fiஐ திரையில் காண முடியும். அந்த பேஜ்ஜின் கடைசியில் உங்கள் ஐபி முகவரியை காண முடியும்.
macOS பொறுத்தவரை,முதலில் ஆப்பிள் லோகோ கிளிக் செய்ய வேண்டும். அங்கு, System Preferences/ Network செல்ல வேண்டும். அதில், நீங்கள் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் நெட்வோர்க் கீழ் ஸ்டேடஸ் பகுதியில் பிரைவட் ஐபி முகவரியை காண முடியும்.
ஆண்ட்ராய்டு பொறுத்தவரை, ஐபி முகவரியை கண்டறிய Settings/ About Phone/ Status/ IP address செல்ல வேண்டும். அதேபோல் ஐஓஎஸில், முதலில் Settings/ WiFi செல்ல வேண்டும். அங்கு, கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் நெட்வோர்க் வலது புறத்தில் information ஐகான் இருக்கும். அதில், ஐபி முகவரியை கண்டறிய முடியும்.
IPv4 and IPv6 addresses
நாம் பயன்படுத்தும் IP முகவரிகள், IPv4 முகவரியை கொண்டிருக்கிறது. இது 32 பைனரி பிட்களைப் பயன்படுத்தும் பழைய நெறிமுறை ஆகும். மொத்தம் 4.29 பில்லியன் தனிப்பட்ட முகவரிகளை வழங்குகிறது. IP முகவரிகளின் எண்ணிக்கை தீர்ந்து போகும் கவலைகள், IPv6 உருவாகிட வழிவகுத்தது. IPv6 முகவரிகள் எட்டு எண்-குழுக்களால் குறிக்கப்படுகின்றன.
IPv6 128-பிட் முகவரிகளைப் பயன்படுத்துகிறது. அதாவது, 340 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் முகவரிகளை அனுமதிக்கிறது. இதனால், நீண்ட நீண்ட காலத்திற்கு ஐபி முகவரி தீர்ந்துவிடும் என்கிற அபாயம் இல்லை.
IPv4 முகவரிகளின் பற்றாக்குறையும் ஒரளவு குறைக்கப்பட்டது. ஏனெனில், மக்கள் தங்கள் சாதனங்களுக்கு தனிப்பட்ட ஐபி முகவரியை பயன்படுத்த தொடங்கினர். இதனால் தான், அனைத்து சாதனங்களும் IPv6க்கு மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.