இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் வாக்கு செலுத்த வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்நிலையில், உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்துவிட்டால், வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை (EPIC - Electors Photo Identification Card) எண் வைத்து உங்கள் அட்டையை பெற முடியும்.
ஆன்லைனில் EPIC நம்பர் பெறுவது எப்படி?
- தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
2. ‘Search by details’ என்பதை கிளிக் செய்யவும்.
3. இதில் உங்களுக்கான ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தகவலை நிரப்பவும்.
4. கேப்ட்சா கோட் என்டர் செய்து கிளிக் ‘Search’ கொடுக்கவும்.
5. இப்போது உங்கள் பெயர் காண்பிக்கப்படும்.
6. ‘View Details’ கொடுக்கவும்.
7. இப்போது EPIC நம்பர் உள்பட அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“