ஒரு ஆதார் அட்டையுடன் பல மொபைல் எண்கள் இணைக்கப்படும் மோசடி செயல்கள் தொடர்ந்து வருகிறது. ஒரு
ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒருவர் 100-150 மொபைல் இணைப்புகளை வைத்திருப்பதை சைபர் கிரைம் பிரிவு கண்டறிந்து, அவற்றை ரத்து செய்யுமாறு அந்தந்த மொபைல் சேவை வழங்குநர்களுக்கு கடிதம் எழுதியது. தமிழகத்தின் சைபர் கிரைம் பிரிவு கடந்த 4 மாதங்களில் தமிழகம் முழுவதும் 25,135 சிம் கார்டுகளை மோசடி செயல்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முடக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மற்றொரு வழக்கில், ஒரு புகைப்பட அடையாளத்துடன் 658 சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து சிம் கார்டுகளும் பொலுகொண்டா நவீனின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மொபைல் கடைகளுக்கு சிம் கார்டு வழங்கும் தொழில் செய்து வருகிறார்.
இது பல்வேறு மோசடி சம்பவங்களுக்கு வழி வகுக்கிறது என சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கிறது. இந்நிலையில் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை தெரிந்து கொள்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
- முதலில் https://tafcop.dgtelecom.gov.in/ என்ற அரசின் அதிகாரப் பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்லவும்.
- இப்போது உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவும். அந்த எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
- ஓ.டி.பி பதிவிட்டு Submit கொடுக்கவும்.
- இப்போது உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் டிஸ்பிளே செய்யப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil