/indian-express-tamil/media/media_files/g4AkRaH0RSPUbnpJx3RO.jpg)
ஸ்மார்ட்ஃபோன்களில் டார்க் மோட் என்பது பெரும்பாலான பயனர்களின் விரும்பமாக மாறியுள்ளது, ஏனெனில் இது கவனத்தை சிதறடிப்பதை குறைக்கும் மற்றும் OLED திரைகள் கொண்ட போன்களில் பேட்டரியை சேமிக்கும்.
பெரும்பாலான ஆப்களில், இயல்பாக, இந்த ஆப்ஷன் இருக்கும். இருப்பினும், இன்னும் டார்க் பயன்முறையில் சரியாக இயங்காத ஆப்ஸ்கள் ஏராளமாக உள்ளன, மேலும் ஆதரிக்கப்படாத ஆப்ஸில் டார்க் மோடை எவ்வாறு ஆன் செய்வது என்பது குறித்த விரிவான வழிகாட்டி இங்கே உள்ளது.
Unsupported ஆப்களில் டார்க் மோட் ஆன் செய்ய 2 வழிகள் உள்ளன. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் டார்க் மோட் ஆன் செய்ய முதலில் செட்டிங்க்ஸ் > Accessibility > Vision enhancement > கொடுத்து high contrast theme கிளிக் செய்து apply கொடுக்கவும்.
மறுபுறம் 2 வழியாக டெவலப்பர் ஆப்ஷன் மூலம் செய்யலாம். ஆனால் இதை செய்யும் போது சில பேங்கிங் ஆப்கள் செயல்படாமல் போக வாய்ப்புள்ளது. டெவலப்பர் ஆப்ஷன் பயன்படுத்த “about phone” ஆப்ஷனில் build number என்ற ஆப்ஷனை 5 முறை tap செய்ய வேண்டும். இதை செய்த பின் டெவலப்பர் ஆப்ஷன் எனெபிள் ஆகும். இதன் மூலம் “Hardware accelerated rendering” கொடுத்து “override force dark” எனெபிள் செய்யவும். இது உங்கள் யூசர் இன்டர்வேஃசில் டார்க் அம்சத்தை இயக்கச் செய்யும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.