Advertisment

E- PAN Card: ஆதார் நம்பர் போதும்; உடனடி இ- பான் கார்டு ஆன்லைனில் ரெடி

ஆதார் கார்டு வைத்து இ- பான் கார்டு (எலக்ட்ரானிக்) பான் கார்டு ஆன்லைனில் அப்ளை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
pan card apply online charges

ஆதார் கார்டு, பான் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் கார்டு, பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பதை கட்டாயமாக்கியது. அந்த வகையில் புதிதாக பான் கார்டு வாங்க நினைப்பவர்கள் அல்லது அவசரத் தேவைக்கு பான் கார்டு தேவைப்படுபவர்கள் ஆதார் நம்பர் வைத்து ஆன்லைன் மூலம்  இ- பான் கார்டு விண்ணப்பித்து பெறலாம்.

Advertisment

இ- பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

  1.  வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கமான https://www.incometax.gov.in/iec/foportal/ செல்ல வேண்டும்.
    2. அங்கு Instant e-PAN பக்கம் சென்று  New e-PAN ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
    3. இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும். அடுத்து confirm மற்றும் continue கொடுக்கவும்.
    4. அடுத்து உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
    5.  வேலிடேட் ஆதார் கிளிக் செய்து மீண்டும் continue கொடுக்கவும்.
    6. அதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட உடன் I Accept கிளிக் செய்து  continue கொடுக்கவும். அவ்வளவு தான் ப்ராசஸ் முடிவடைந்து உங்களுக்கு என்ன நிலை என்பதை தெரியப்படுத்தும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pan Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment