Advertisment

ஜியோ ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட்: நீங்கள் விரும்பும் மொபைல் எண் பெறலாம்; இப்படி செய்யுங்க

ஜியோ ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் திட்டத்தில் நீங்கள் விரும்பிய மொபைல் எண் தேர்ந்தெடுப்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
Jul 10, 2023 14:52 IST
New Update
jio recharge plan

Reliance Jio

ஜியோ ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் என இரு வகையாக தொலைத் தொடர்ப்பு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் உங்கள் விரும்பத்திற்கு ஏற்ப ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் திட்டத்தில் மொபைல் எண் தேர்ந்தெடுப்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Advertisment

ஜியோ சாய்ஸ் நம்பர் திட்டம்

முன்பு நாம் விரும்பிய மொபைல் எண்ணை தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் தெரிவித்தால் அந்த எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மாறிவரும் நாட்களில் அதிகமான மக்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால், வாடிக்கையாளர்கள் டெலிகாம் நிறுவனங்கள் ஒதுக்கும் எண்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும். இந்த வரிசையில் ஜியோ சற்று மாறுபட்டு பயனர்கள் தங்கள் விருப்பமான எண்களைத் தேர்ந்தெடுக்க சாய்ஸ் நம்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் விரும்பும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் எண்களை தேர்ந்தெடுக்கலாம்.

சாய்ஸ் ஆஃப் நம்பர் பெறுவது எப்படி?

சாய்ஸ் நம்பர் திட்டத்தின் மூலம், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் எண்களை குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்து வாங்கலாம். உங்கள் விருப்பமான எண், கடைசி 4-6 நம்பர்களை உங்கள் விருப்பபடி தேர்ந்தெடுத்துப் பெறலாம்.

அதிகாரப்பூர்வ இணைய பக்கம் செல்லவும்

சாய்ஸ் நம்பர் பெற ஜியோவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கம் https://www.jio.com/ செல்லவும். அங்கு Self Care செக்ஷன் செல்லவும். அல்லது நேரடியாக https://www.jio.com/selfcare/choice-number/ இந்த லிங்க் பயன்படுத்தலாம். மை ஜியோ ஆப் மூலமாகவும் செய்யலாம்.

இந்த செக்ஷனை செலக்ட் செய்யுங்க

இப்போது Self Care செக்ஷன் சென்று 'Choice Number' ஆப்ஷனை கண்டறியவும். இந்த ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். MyJio செயலியில் பயன்படுத்தினால் 'Choice Number' என டைப் செய்யவும்.

நம்பர் என்டர் செய்யவும்

Choice Number ஆப்ஷன் கொடுத்ததும் ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட் திட்டத்தில் நீங்கள் விரும்பும் கடைசி 4 முதல் 6 இலக்க எண்களை டைப் செய்யவும். உங்களுடைய விருப்ப நம்பர், எளிதாக நினைவில் வைக்கக்கூடிய பேன்சி நம்பர்களை குறிப்பிடலாம்.

ரூ.499 கட்டணம்

உங்கள் விருப்பமான நம்பரை தேர்ந்தெடுத்ததும் எண்ணை ஆக்டிவேட் செய்ய ரூ.499 கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வளவு தான் பில் வந்துவிடும். உங்களின் புதிய ஜியோ ப்ரீபெய்ட்/போஸ்ட்பெய்ட் எண் 24 மணி நேரத்திற்குள் ஆக்டிவேட் ஆகிவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Jio #Reliance Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment