தற்போது நாம் அனைவரும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்திற்கு சென்றுதான் டிக்கெட் புக் செய்கிறோம். இந்நிலையில் டிக்கெட் கேன்சல் செய்தால், அதற்கான பணத்தை எப்படி பெற்றுகொள்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை பொருத்தவரை பி.என்.ஆர் நம்பரை சிஸ்டெப் வழங்கும்போதுதான் பணம் எடுக்கப்படும்.
வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும்போது, நமக்கு ’ஆட்டோபே’ என்ற ஆப்ஷன் மிகவும் உதவியாக இருக்கும். இந்நிலையில் ரயிலில் இருக்கைக்கான சார்ட் வெளியான பின்பும், உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால், நீங்கள் கேன்சல் செய்யும் பணம் மட்டுமே கழிக்கப்படும் மீதி உள்ள பணம் மீண்டும் சமந்தபட்டோர் கணக்கிற்கே மீண்டும் சென்றுவிடும்.
இந்நிலையில் இந்த ஆட்டோபே அம்சத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்திற்கு சென்று உங்கள் பயண விவரங்கள், ரயிலின் கோச் மற்றும் பணியின் விவரங்கள் கொடுத்துவிடுங்கள்.
அடுத்தது, நீங்கள் பணம் செலுத்தும் பட்டணை அழுத்த வேண்டும். இதில் பல்வேறு முறையில் பணம் செலுத்தும் ஆப்ஷனை காட்டும். இதில் ஆட்டோ பே, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஐ.ஆர்.சி.டி.சி முத்ரா, நெட் பேங்கிங் போன்று பல ஆப்ஷன் காட்டும். இதில் நீங்கள் ஆடோபே என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதிலும் 3 ஆப்ஷன்ஸ் இருக்கும் யு.பி.ஐ, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு இருக்கும் இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதற்கான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“