/tamil-ie/media/media_files/uploads/2023/06/how-to-add-weather-widget.jpg)
Weather widget
பிபர்ஜாய் புயல் மிகவும் கடுமையான சூறாவளி புயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் சில பகுதிகள் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலை எதிர்கொள்ளவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்துள்ளன.
இந்நிலையில் இதுபோன்ற சமயங்களில் ஸ்மார்ட்போனில் வானிலை அலர்ட் பெறுவது மிகவும் உதவியாக இருக்கும். இருந்த இடத்தில் இருந்தே வானிலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம். மழை, புயல், வெயில் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் சுற்றியுள்ள பகுதியின் வானிலை நிலவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இதற்கு தனியாக ஆப் ஏதும் டவுன்லோடு செய்ய வேண்டியதில்லை உங்கள் ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களிலேயே இதை பெறலாம்.
ஐபோனில் வானிலை அலர்ட்
உங்கள் ஐபோன் ஐ.ஓ.எஸ் 16 அல்லது அதற்கு மேல் உள்ள அப்கிரோடுகளை கொண்டிருக்க வேண்டும்.
இப்போது ஹோம் ஸ்கிரீன் பக்கம் சென்று லாங் பிரஸ் செய்ய வேண்டும்.
இடப்புறத்தில் வரும் பிளஸ் பட்டனை கிளிக் செய்யவும்.
அதில் “weather” என டைப் செய்து பின்னர் அதை ஹோம் ஸ்கிரீனில் சேர்க்கவும்.
அவ்வளவு தான் இப்போது ஹோம் ஸ்கிரீனில் வானிலை விட்ஜெட் சேர்க்கப்படும். தற்போதைய வெப்பநிலை மற்றும் 10 நாள் முன்னறிவிப்பு போன்ற விவரங்களை அதில் காணலாம்.
ஆண்ட்ராய்டு வானிலை அலர்ட்
ஹோம் ஸ்கிரீனில் லாங் பிரஸ் செய்யவும்.
அங்கு “widgets” செலக்ட் செய்து, “weather” என சர்ச் செய்யவும்.
பின்னர் அதை லாங் பிரஸ் செய்து ஹோம் ஸ்கிரீனில் சேர்க்கவும்.
ஆண்ட்ராய்டு ஃபோன்களில், வானிலை விட்ஜெட் தற்போதைய வெப்பநிலை, யு.வி இண்டக்ஸ் மற்றும்
ஈரப்பதத்தின் சதவீதம் போன்ற விவரங்களைக் காண்பிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.