மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல் என்ற அம்சம் அறிமுகம் செய்தது. ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் உங்கள் பிடித்த பிரபலங்களை ஃபாலோ செய்வது போல் இதிலும் பிரபலங்களை பின்தொடரலாம். அவர்கள் பற்றின அப்டேட்களை இதில் தெரிந்து கொள்ளலாம். கிரிக்கெட், திரை பிரபலங்கள், பெரு நிறுவன தலைவர்கள் எனப் பலருடன் இணையலாம்.
இந்த வசதிக்கு ஒரு புறம் வரவேற்பு கிடைத்தாலும் மறுபுறம் இதற்கு பலர் விமர்சனம் செய்துள்ளனர். வாட்ஸ்அப்-பை மற்ற சமூக ஊடக தளம் போல் மாற்றுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இது ஸ்டேட்டஸ் பக்கத்தில் அப்டேட்ஸ் எனப் பெயர் மாற்றி ஸ்டேட்டஸ் மற்றும் இந்த சேனல் வசதிகளையும் இணைந்துள்ளது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்டர்ஃபேஸை மாற்றியுள்ளது.
இருப்பினும் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் சேனல் வசதியை Hide செய்து பழைய படி பயன்படுத்தலாம். 2 முறைகளில் இதை செய்யலாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு, ஐபோனை பழைய வாட்ஸ்அப் வெர்ஷனுக்கு மாற்றுவதன் மூலம் இந்த அம்சத்தை நீங்கள் தவிர்க்கலாம். அவ்வாறு செய்யும் போது நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை பேக் அப் எடுத்து புதிய அப்டேட்டட் வாட்ஸ்அப்-பை அன்இன்ஸ்டால் செய்து பழைய வெர்னுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து APK ஃபைல் டவுன்லோடு செய்து மாற்றலாம்.
இல்லை நீங்கள் பழைய வாட்ஸ்அப் வெர்ஷனுக்கு மாற்ற விரும்பவில்லை என்றால், வாட்ஸ்அப் சேனல் வசதியை Hide செய்யலாம். இதற்கு முதலில் உங்கள் வாட்ஸ்அப்-பை ஓபன் செய்து வாட்ஸ்அப் அப்டேட்ஸ் பக்கம் சென்று வியூ அப்டேட்ஸ் கொடுக்கவும். இது உங்கள் சேனல்களை கீழே தள்ளிவிடும். அல்லது பழையபடி வேண்டும் என்றால் சிம்பிளாக உங்கள் வாட்ஸ்அப் சேனல் ஃபாலோக்களை தவிர்த்து விடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“