உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப் இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியைப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக தனியுரிமை பாதுகாப்பு அம்சம் பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது. ஒருவரை பிளாக் செய்யும் வசதி, last seen, about section hide செய்யும் வசதி எனப் பல உள்ளது.
இந்த வரிசையில் குறிப்பிட்ட தனி நபர் contacts இடத்தில் இருந்தும் உங்கள் வாட்ஸ்அப் டிஸ்ப்ளே பிக்ஸரை (WhatsApp profile picture) Hide செய்து வைக்கும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

- இதற்கு முதலில் உங்கள் போன் வாட்ஸ்அப் பக்கம் சென்று வலப்புறத்தில் உள்ள 3 dot மெனு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- இப்போது செட்டிங்ஸ் பக்கம் சென்று அங்கு Privacy > ‘Who can see my personal info’ என்ற டேப்பை செலக்ட் செய்யவும். அடுத்து அதில் பிரொபைல் போட்டோ கொடுத்து ‘My contacts except’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அடுத்ததாக இப்போது புது ஸ்கிடீன் ஓபன் செய்யப்படும். அதில் உங்கள் contacts கொடுக்கப்பட்டிருக்கும். யாருக்கு உங்கள் DP தெரிய வேண்டாம் என விரும்புகிறீர்களோ அவர்கள் contacts-யை செலக்ட் செய்து ஓகே கொடுக்கவும். அவ்வளவு தான். இப்போது உங்கள் செட்டிங்ஸ் மாறி விடும்.