Advertisment

பார்ப்பதை எல்லாம் நம்பக் கூடாது: போலி வீடியோக்களை கண்டறிவது எப்படி?

How to identify fake videos: ஏ.ஐ மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளன. இந்நிலையில் போலி வீடியோக்களை கண்டறிவது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Fake video.jpg

பிரபலங்கள் பேசுவது போன்ற போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளன. இதனால் பணம் மோசடி மற்றும் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன.  பிரபலங்கள், தலைவர்கள் பேசியதை எடிட் செய்து, திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மோசடியில்  ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள்  உருவாக்கி மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் போலி வீடியோக்களை கண்டறிவது குறித்த சில டிப்ஸ்களை இங்கு  பார்ப்போம். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சோனா அகர்வாலின் "முதலீட்டு திட்டத்திற்கு" விளம்பரபடுத்துவது போன்ற வீடியோவும், மற்றொரு வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சூரஜ் ஷர்மா என்பவரின் முதலீட்டு திட்டதை பாராட்டுவது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த  இரண்டு வீடியோவும் போலியானது என தெரிய வந்துள்ளது.  

அந்த  வீடியோக்கள் மேனிப்புலேட் செய்யப்பட்டது எனவும் கண்டறியப்பட்டது.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மக்கள் தொடர்பு அதிகாரி ஃபிராங்கோ வில்லியம்ஸ் கூறுகையில், முகேஷ் அம்பானி பேசுவது போன்ற வீடியோவில் அவரின் குரல் எடிட் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் எந்தவொரு தனிநபரையோ அல்லது முதலீட்டு திட்டத்தையோ அங்கீகரிக்கவில்லை என்றும் கூறினார். அதே போல் ஈஷா அறக்கட்டளை நிறுவனமும் அவர்கள் தொடர்பான அந்த வீடியோவை போலி எனக் குறிப்பிட்டு பேஸ்புக்கில் தெளிவுபடுத்தியுள்ளது. 

https://indianexpress.com/article/technology/artificial-intelligence/how-to-identify-fake-videos-8942131/

Check the voice

AI-யால் உருவாக்கப்பட்ட குரல்கள் பொதுவாக ஒரே மாதிரியாக இருக்கும். அந்த வீடியோவில் 'பிரபலங்கள்' பேசுவது போல் இருந்தால் பிரபலங்களின் பக்கத்தில் உள்ள மற்ற ஒரிஜினல் வீடியோக்களுடன் குரல்களை ஒப்பிட்டு பார்க்கவும். 

Analyse facial movements

வீடியோவில் உள்ள பிரபலங்கள் அல்லது மற்ற படங்களை உன்னிப்பாக கவனியுங்கள். எடிட் செய்யப்பட்ட வீடியோ எப்போதும் இயற்கையான முக  அசைவுகளை வெளிப்படுத்தாது.  முக அசைவுகளில் உள்ள முரண்பாடுகளுக்கு கவனம் செலுத்துங்கள்.

Check the source

இந்த வீடியோ எந்த  பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யார் வெளியிட்டுள்ளார் என்பதைப் பாருங்கள். இதுபோன்ற வீடியோக்கள் பொதுவாக விளம்பரத்திற்காக அடையாளம் தெரியாத நபர்களால் பகிரப்படும். இந்த வீடியோக்களை நம்ப வேண்டாம். 

Check the content

வீடியோவில் உள்ள தகவல்களை கவனியுங்கள். முதலீடு தொடர்பான வீடியோ என்று பாருங்கள். குறைந்த முதலீடு அதிக லாபம் என்று விளம்பரப்படுத்தினால் அது போலி வீடியோவாகும்.

Google search

நீங்கள் இதுபோன்ற வீடியோவைப் பார்த்து , திட்டத்தில் முதலீடு செய்வது பற்றி யோசித்தால்,  வீடியோவில் பேசிய  நபர் அந்த நிறுவனம், என்ன திட்டம் என்பது  பற்றி கூகுளில் தேடிப் பார்க்கவும். அவ்வாறு செய்யும் போது அந்நிறுவனம் அந்த நபர் பற்றி தெரிய வரும். மோசடி செய்திருந்தால் அந்த நபர், அந்த நிறுவனம் மீதான காவல்துறை வழக்குகள் குறித்து தெரிய வரும். 

Trust your instincts, report 

சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்கள் ஏதாவது சந்தேகப்படும் படி இருந்தால் முதலில் அதை நீங்கள் சிந்தித்து பார்த்து ஆய்வு செய்யுங்கள். எப்போதும் இதுபோன்ற விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகப்படும் படி தகவல் இருந்தால் அந்த வீடியோவை  புகாரளிப்பதன் மூலம் மற்றவர்கள் மோசடிக்கு ஆளாவதை தடுக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Artificial Intelligence
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment