இந்தியாவில் யு.பி.ஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைப் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதே நேரம் யு.பி.ஐ மோசடி சம்பவங்களிலும் அதிகரித்து வருவது. இந்நிலையில், யு.பி.ஐ பணப் பரிவர்த்தனையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று பார்ப்போம்.
பணம் பெற யு.பி.ஐ பின் நம்பர் தேவையில்லை
இந்த வகையான மோசடி சம்பவம் குறிப்பாக விளம்பரம், பரிசுத் தொகை கிடைத்துள்ளது என்று கூறப்பட்டு உங்களுக்கு அனுப்பபடும். அதாவது போன் பே, பேடிஎம் செயலியில் உங்களுக்கு குலுக்கல் முறையில் பல ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
இந்த பணத்தைப் பெற நீங்கள் உங்கள் யு.பி.ஐ பின் நம்பரை உள்ளிட வேண்டும் என்று விளம்பரம் அனுப்பபடும்.
இதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எப்போது பணத்தைப் பெற உங்கள் UPI பின்னை உள்ளிட வேண்டியதில்லை. UPI பின் பணம் அனுப்பும் போது மட்டுமே தேவை, பெறுவதற்கு இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
தவறுதலாக உங்கள் கணக்கிற்கு பணம் வந்தாக செய்தி வந்ததா?
உங்கள் கணக்கில் ஒரு பெரிய தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறி மெசேஜ் அனுப்பபட்டு, அதைத் தொடர்ந்து யாரோ ஒருவர் உங்களுக்கு கால் செய்து தவறுதலாக பணத்தை மாற்றி அனுப்பி விட்டதாக கூறி போன் செய்தார்கள் என்றால் எச்சரிக்கை தேவை.
மருத்துவமனை கட்டணங்கள் அல்லது பள்ளிக் கட்டணம் போன்ற அவசர நிலைகளைக் காரணம் காட்டி, பணத்தை பெற முயற்சிக்கலாம். நல்லெண்ணத்துடன் செயல்படுவதற்கு முன், பணம் உண்மையில் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். பெரும்பாலும், மோசடி செய்பவர்கள் போலியான எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்பி உங்களை நம்பவைத்து உங்கள் பணத்தை அபகரிக்க இருக்கலாம். எனவே இந்த மாதிரியான செய்தி வரும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“we