Advertisment

வாட்ஸ்அப் குழு அழைப்புகளில் நடுவில் சேருவது எப்படி?

How to join ongoing whatsapp group video voice calls Tamil News படத்தில் காண்பதைப் போல, வாட்ஸ்அப் திரையின் மேல் ஒரு "சேர்" பட்டன் இருக்கும்.

author-image
WebDesk
New Update
How to join ongoing whatsapp group video voice calls Tamil News

How to join ongoing whatsapp group video voice calls Tamil News

How to join ongoing whatsapp group video voice calls Tamil News : சில வாரங்களுக்கு முன்பு, வாட்ஸ்அப் அதன் முதல் கட்ட இணைக்கப்பட்ட அழைப்புகளைத் தொடங்கியது. இது இப்போது க்ரூப் சாட்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த அனுபவத்தை மேம்படுத்துகிறது. எனவே, இப்போது உங்கள் குழுவில் யாராவது உங்களை அழைக்கும் போது, அந்த அழைப்பைத் தவறவிட்டால், அவர்கள் விரும்பும் போதெல்லாம் சேரலாம். ஆம், அழைப்பு இன்னும் தொடர்ந்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே போகலாம் மற்றும் மீண்டும் சேரலாம்.

Advertisment

குரூப் வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்புகளுக்கு வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில் நீங்கள் ஒரு அழைப்பை இடையில் விட்டுவிட்டு பின்னர் வாட்ஸ்அப்பில் மீண்டும் அதே அழைப்பில் சேர முடியாமல் போகும். நிறுவனம் அதைக் கவனித்து தற்போது புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

"இப்போது க்ரூப் அழைப்புகள் உங்கள் குழு சாட்களுக்கு பொருத்தமானவை மற்றும் சாட் டேபில் இருந்து நீங்கள் சிரமமின்றி அவர்களுடன் சேரலாம். குழு அழைப்பு பிரபலமடைந்து வருவதால், இணைந்த அழைப்புகளை ஒருங்கிணைப்பது வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் குழுக்களுடன் இணைக்க ஒரு புதிய தன்னிச்சையான வழியை வழங்குகிறது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒருவர் அழைப்பு தகவல் திரையையும் பார்க்க முடியும். அங்கு யார் ஏற்கெனவே அழைப்பில் இருக்கிறார்கள், யார் அழைக்கப்பட்டனர், ஆனால் இன்னும் சேரவில்லை என்பதைப் பார்க்க முடியும். கூடுதலாக, நீங்கள் 'புறக்கணி' என்பதை க்ளிக் செய்தால், உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள அழைப்புகள் டேபில் இருந்து பின்னர் சேர முடியும்.

நிறுவனம் ஏற்கனவே இந்த அம்சத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. அழைப்புகளை எவ்வாறு மீண்டும் இணைக்கலாம் என்பதற்கான விரைவான பார்வை இங்கே.

தற்போதைய வாட்ஸ்அப் குழு அழைப்புகளில் சேருவது எப்படி?

நீங்கள் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்பைப் புறக்கணித்திருந்தால், வாட்ஸ்அப்பில் க்ரூப் சாட்டிலிருந்து நேரடியாக அழைப்பில் சேரும் விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள். இது பங்கேற்பாளர் பெயர்களுக்கு பதிலாகக் குழுவின் பெயரைச் சொல்லும். மேலே உள்ள படத்தில் காண்பதைப் போல, வாட்ஸ்அப் திரையின் மேல் ஒரு "சேர்" பட்டன் இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment