டெலிகிராமில் உங்களை பிளாக் செய்திருக்கிறார்களா என்பதை எப்படிக் கண்டறிவது?
How to know if someone has blocked you on Telegram Tamil News அவர்களின் முகவரி புத்தகத்தில் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் படத்தைப் பார்க்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
How to know if someone has blocked you on Telegram Tamil News அவர்களின் முகவரி புத்தகத்தில் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் படத்தைப் பார்க்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
How to know if someone has blocked you on Telegram Tamil News
How to know if someone has blocked you on Telegram Tamil News : டெலிகிராம், பாதுகாப்பிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொண்ட இலவச உடனடி செய்தி சேவை. ஓப்பன் சோர்ஸ், கிராஸ்-பிளாட்ஃபார்ம் சேவையுடன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வீடியோ அழைப்பு, VoIP, ஃபைல் பகிர்வு மற்றும் பல அம்சங்களுடன் இது வருகிறது.
Advertisment
கூடுதலாக, இந்த இயங்குதளம் விருப்பமான end-to-end encrypted செய்த "ரகசிய" சாட்களையும் வழங்குகிறது. ஆண்ட்ராய்டுக்கான டெலிகிராம் பயன்பாடு கூகுள் பிளே ஸ்டோரில் 500 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது.
மற்றவர்கள் உங்களை மீண்டும் தொடர்புகொள்வதைத் தடுக்கவும் இந்த தளம் உங்களை அனுமதிக்கிறது. ஒரு பயனர் உங்களை பிளாக் செய்தால், அந்த பயனருக்கு நீங்கள் செய்திகளை அனுப்ப முடியாது. டெலிகிராமில் யாராவது உங்களை பிளாக் செய்திருப்பதைத் தெரிந்துகொள்ளக்கூடிய சில வழிகள் இங்கே.
அனுப்பப்படாத செய்திகள்
Advertisment
Advertisements
நீங்கள் ஒரு பயனருக்குச் செய்தி அனுப்பியிருந்தால் மற்றும் உங்கள் செய்திகள் அனுப்பப்படாவிட்டால், நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். மேலும், அந்த பயனர் பயன்பாட்டை நீக்கியிருக்கலாம் அல்லது ஆஃப்லைனில் இருக்கலாம்.
காட்சி படம்
டெலிகிராமில் யாராவது உங்களைத் தடுத்திருப்பதாக நீங்கள் நினைத்தால், அவர்களின் சுயவிவரப் படங்களை உங்களால் பார்க்க முடிகிறதா என்று சரிபார்க்கவும். உங்களால் அவர்களின் சுயவிவரப் படத்தைப் பார்க்க முடியாவிட்டால், மற்றவர்கள் பார்க்க முடிந்தால், நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம்.
அவர்களின் சுயவிவரப் படத்தை உங்களால் பார்க்க முடியவில்லை எனில், அவர்களுடைய தொடர்புகளில் நீங்கள் சேர்க்கப்படாமலும், அவர்களின் சுயவிவரப் படத்தின் தெரிநிலை அமைப்புகளை மாற்றியும் அமைத்திருக்கலாம். இதனால் அவர்களின் முகவரி புத்தகத்தில் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் படத்தைப் பார்க்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஸ்டேட்டஸ்
டெலிகிராம் கடைசியாக பார்த்த விருப்பத்திற்கு முடக்கும் அல்லது மாற்ற உதவும் ஆப்ஷனை வழங்குகிறது. யாராவது உங்களை பிளாக் செய்திருந்தால், சம்பந்தப்பட்ட பயனரின் ஸ்டேட்டஸ் தோன்றாது.
நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருந்தால், மற்றவர் கணக்கில் நுழையும் போது "ஆன்லைன்" நிலை காட்டப்படாது. கூடுதலாக, மதிப்பிடப்பட்ட தேதி அல்லது நேரத்திற்குப் பதிலாக, "நீண்ட காலத்திற்கு முன்பு" என்கிற மெசேஜ் மட்டுமே நீங்கள் பெரும்பாலும் பார்ப்பீர்கள்.
இந்த நிலையில் யாராவது உங்களை பிளாக் செய்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்கச் சிறந்த வழி, ஒரே நபரின் ஸ்டேட்டஸை இரண்டு வெவ்வேறு டெலிகிராம் கணக்குகளுடன் ஒப்பிடுவதுதான்.
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிய சரியான வழி இது இல்லை என்றாலும், ஒரு பயனரால் நீங்கள் தடுக்கப்பட்டிருந்தால் இந்த முறைகளை ஒற்றுமையாகப் பயன்படுத்துவது உங்களுக்குச் சரியான முடிவைத் தரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil