ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகும். இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. ஆதார் மிக முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. ஷாப்பிங் முதல் வங்கி பணப் பரிவர்த்தனை வரை அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டையில் பெயர், புகைப்படம், 12 இலக்க பிரத்யேக எண், வீட்டு முகவரி உள்பட முக்கிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்தநிலையில், ஆதாருடன் மொபைல் நம்பர் இணைப்பது முக்கியமானதாகும். பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆதார் பயன்படுத்தப்படுவதால் மொபைல் நம்பரை இணைக்குமாறு அரசு வலியுறுத்துகிறது. மேலும் உங்களுடைய ஒரிஜினல் ஆதார் அட்டை தொலைந்து விட்டது என்றாலும் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டு இருந்தால் அது மூலமாக புது ஆதார் அட்டை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆதார் - போன் நம்பர் இணைப்பது எப்படி?
- உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் இ-சேவை மையத்திற்கு செல்லவும்.
- அங்குள்ள நிர்வாகி வழங்கும் ஆதார் திருத்தப் படிவத்தை நிரப்பவும்.
- அடுத்து, உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிக்க அல்லது புதிதாக சேர்க்க விரும்பும் மொபைல் எண்ணை குறிப்பிடவும்.
- இப்போது நிர்வாகி உங்களிடம் பயோமெட்ரிக் ஸ்கேன் (கைரேகை போன்று) செய்து அங்கீகரித்து இறுதியாக படிவத்தை ஆன்லைனில் அப்லோடு செய்வார்.
- இதன்பின் Update Request Number (URN) என்ற ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.
- இந்த எண் கொண்டு ஸ்டேட்ஸ் டிராக் செய்து செக் செய்து கொள்ளலாம்.
- UIDAI toll-free number 1947 என்ற எண்ணிற்கு அழைத்தும் ஆதார் அப்டேட் ஸ்டேட்டஸ் செக் செய்து கொள்ளலாம்.
மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க
- மத்திய அரசின் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- முகப்புப்பக்கத்தில் மை ஆதார் எனக் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்யவும்.
- அடுத்து Aadhaar Services ஆப்ஷன் சென்று அங்கு வரும் drop-down மெனுவில் Verify Registered mobile or email id கொடுக்கவும்.
- புதிதாக திறக்கப்பட்ட பக்கத்தில் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் அல்லது இமெயில் ஐடியை உள்ளிடவும்.
- இப்போது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் "The mobile you have entered has already been verified with our records" என்று திரையில் காண்பிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.