/tamil-ie/media/media_files/uploads/2022/03/Google-pay-introduce-Taptopay.jpg)
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் கூகுள் பே (Google Pay) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கூகுள் பே யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயனர் தங்கள் வங்கி கணக்கை இணைத்து பயன்படுத்தலாம்.
பொதுவாகவே இதுபோன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பயனரின் வங்கி கணக்கு தான் இணைக்கப்படும். ஆனால் கூகுள் பே சமீபத்தில் மேம்பட்ட அம்சத்தை அறிமுகம் செய்தது. கூகுள் பே பணப் பரிவர்த்தனையில் ரூபே கிரெடிட் கார்ட் இணைந்து பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) உடன் இணைந்து Google Pay பயனர்கள் தங்கள் RuPay கிரெடிட் கார்டுகளுடன் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதித்து. இந்நிலையில் கூகுள் பே-ல் ரூபே கிரெடிட் கார்டு எப்படி இணைப்பது என்று இங்கு பார்ப்போம்.
கூகுள் பே-ல் ரூபே கிரெடிட் கார்டு இணைப்பது எப்படி?
1. முதலில் கூகுள் பே ஆப் ஓபன் செய்யவும்.
2. வலப்புறத்தில் உள்ள profile icon பக்கத்திற்கு செல்லவும்.
3. அதில் கீழே Scroll செய்து ‘Payment’ methods செலக்ட் செய்யவும். அதில், ‘RuPay credit card’ என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
4. இப்போது ரூபே கிரெடிட் கார்டு இணைக்கப்பட்ட வங்கியை தேர்வு செய்யவும்.
5. அடுத்து வரும் விவரங்களை கொடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு மெசேஜ் அனுப்பபடும்.
6. இது verify செய்யப்பட்ட உடன், உங்கள் கிரெடிட் கார்டு கூகுள் பே-ல் இணைக்கப்படும். அதன் பின் கூகுள் பே-ல் கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.