/indian-express-tamil/media/media_files/mCtjH8FhvYB36W1FxtSp.jpg)
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கூகுள் பே, போன் பே, பே.டி.எம் போன்றவைகள் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. பயனரின் வங்கி கணக்கு, டெபிட் கார்டு பயன்படுத்தி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் யு.பி.ஐ-ல் ரூபே கிரெடிட் கார்டு இணைத்து பரிவர்த்தனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி யு.பி.ஐ வசதி உள்ள ஆப்பில் எஸ்.பி.ஐ ரூபே கிரெடிட் கார்டு இணைப்பது குறித்து இங்கு பார்ப்போம்.
1. கூகுள் பே, போன் பே, பே.டி.எம் போன்ற யு.பி.ஐ ஆதரிக்கும் செயலி டவுன்லோடு செய்யவும்.
2. அதில் உங்கள் ப்ரோபைல் (UPI Profile) கிரியேட் செய்யவும்.
3. இப்போது (எ.கா )கூகுள் பே ஆப்பில் ‘My Account’ or 'Bank Account' செக்ஷன் சென்று ‘State Bank of India’ ஆப்ஷன்
தேர்ந்தெடுத்து உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கொடுக்கவும்.
4. அடுத்து 6 இலக்க கிரெடிட் கார்டு எண், உங்கள் பெயர், கார்ட் விவரங்கள் expiry date மற்றும் CVV எண்ணை கொடுக்கவும்.
5. இப்போது உங்கள் தகவல்கள் வெரிஃபை செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும். அதை இப்போது ஆப்பில் உள்ளிடவும். அவ்வளவு தான் இப்போது உங்கள் எஸ்.பி.ஐ ரூபே கிரெடிட் கார்டு, கூகுள் பே யு.பி.ஐ உடன் இணைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.