/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aadhar-1.jpg)
Aadhar card
தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உங்கள் ஆதார் நம்பரை லாக் செய்தும், அன் லாக் செய்தும் பயன்படுத்தலாம். ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். ஷாப்பிங் முதல் வங்கி பணப் பரிவர்த்தனை வரை அனைத்துப் பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் எண் லாக் செய்யும் போது authentication செய்ய முடியாது.
UIDAI கூற்றுப்படி, ஆதார் நம்பர் லாக் செய்வதன் மூலம் மூன்றாம் தரப்பினரால் ஆதார் எண் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க முடிகிறது. ஆதார் அன் லாக் செய்யப்பட்டால் மீண்டும் authentication அம்சம் செயல்படத் தொடங்கும்.
ஆதார் நம்பர் லாக்/அன் லாக் செய்வது
1.UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணைய தளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2.அதில் My Aadhaar ஆப்ஷன் சென்று, Aadhaar Services உள் சென்று ‘Aadhaar Lock and Unlock Services’ பக்கம் செல்ல வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Screenshot-2023-03-03-195042-1.webp)
3.அடுத்த பக்கத்தில் மீண்டும்‘Lock/Unlock Aadhaar’ செலக்ட் செய்ய வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Screenshot-2023-03-03-195117.webp)
4.இப்போது விவரங்கள் அடங்கிய பக்கத்தில் ‘Click here to generate VID’ என்று கொடுக்க வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Screenshot-2023-03-03-195145.webp)
5.இப்போது தோற்றும் திரையில் உங்கள் ஆதார் எண் மற்றும் செக்யூரிட்டி கோடு (Captcha) கொடுத்து generate/retrieve VID செய்ய வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Screenshot-2023-03-03-195247.webp)
6.அடுத்து, மீண்டும் 4-வது ஸ்டெப்பிற்கு செல்ல வேண்டும். அங்கு சென்று ‘Next’ எனக் கொடுக்கவும்.
7.இப்போது இங்கு அதார் லாக் செய்ய வேண்டுமா/ அன் லாக் செய்ய வேண்டுமா என்பதைக் டிக் செய்ய வேண்டும் . இதைக் கொடுத்து VID, உங்களுடைய பெயர், pin code மற்றும் செக்யூரிட்டி கோடு உள்ளிட வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Screenshot-2023-03-03-195211.webp)
8.அடுத்ததாக ‘Send OTP’ எனக் கொடுக்கவும். இப்போது ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பபடும். அவ்வளவு தான் உங்கள் ஆதார் Lock/Unlock ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.