How to lock your Facebook profile Tamil News : ஃபேஸ்புக் பல புதிய அம்சங்கள் மற்றும் தனியுரிமை அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுவருவதால், நீண்ட காலமாக இந்த பிளாட்ஃபார்மில் இருக்கும் பயனர்கள் தங்கள் சுயவிவரங்களில் இப்போது வைத்திருக்கும் கட்டுப்பாட்டை அறிந்திருக்க மாட்டார்கள். இவற்றில் ஒன்று உங்கள் ஃபேஸ்புக்கை லாக் செய்வதற்கான திறன். இதனால் மற்ற ஃபேஸ்புக் பயனர்கள் உங்கள் அனுமதியின்றி உங்கள் ஃபேஸ்புக் சுயவிவரத்துடன் தொடர்பு கொள்ள முடியாது.
ஃபேஸ்புக்கில் உள்ள எவரும் உங்களை படங்களில் டேக் செய்ய மற்றும் டைம்லைனில் போஸ்டை பகிர முடியும். இருப்பினும், இதை நீங்கள் மாற்றலாம். ஃபேஸ்புக் டெஸ்க்டாப் பக்கத்தில் தற்போது கட்டுப்பாடு இல்லை. ஆனால், இந்த அமைப்பை மாற்ற நீங்கள் ஃபேஸ்புக் பயன்பாடு அல்லது ஃபேஸ்புக் மொபைல் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.
ஸ்டெப் 1: பேஸ்புக்கைத் திறந்து உங்கள் சுயவிவரத்திற்குச் செல்லவும்
Open your Facebook profile
நீங்கள் ஃபேஸ்புக்கைத் திறந்ததும், பயன்பாட்டிலோ அல்லது பக்கத்திலோ, மேல் டேபில் உள்ள முதல் ஐகானைக் கிளிக் செய்யுங்கள். இது ஒரு வீட்டின் வடிவிலான காலவரிசை பட்டன். உங்கள் சுயவிவரத்தைத் திறக்க உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்க.
ஸ்டெப் 2: உங்கள் சுயவிவரத்தை லாக் செய்யவும்
Lock your profile by following this sequence
‘கதையை சேர்’ பட்டனுக்கு அடுத்து, நீங்கள் மூன்று-புள்ளி மெனுவைக் காண்பீர்கள். உங்கள் நண்பர்களின் தொடர்புகளிலிருந்து உங்கள் சுயவிவரத்தை லாக் செய்ய, அதனைத் திறந்து அடுத்த திரையில் சுயவிவரத்தை பூட்டு என்பதைத் தேர்வு செய்க. நண்பர்கள் மற்றும் அந்நியர்கள் பார்க்கக்கூடிய மற்றும் பார்க்க முடியாதவை உட்பட, உங்கள் சுயவிவரத்தை லாக் செய்யும்போது என்ன மாற்றங்கள் என்பதை அடுத்தடுத்த திரை காண்பிக்கும். உங்கள் ஃபேஸ்புக் சுயவிவரத்தை வெற்றிகரமாக லாக் செய்ய, தொடர்ந்து ‘சரி’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
உங்கள் சுயவிவரத்தை அன்லாக் செய்வது எப்படி?
சில காரணங்களால் எதிர்காலத்தில் இந்த மாற்றத்தை மாற்றியமைக்க விரும்பினால், உங்கள் சுயவிவரத்தை அன்லாக் செய்ய ஃபேஸ்புக் உங்களை அனுமதிக்கிறது. இதைச் செய்ய, ஸ்டெப் 1-ல் செய்ததைப் போல உங்கள் சுயவிவரத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். ஸ்டெப் 2-ல் நீங்கள் தேர்வு செய்த அதே மூன்று-புள்ளி மெனுவைத் திறந்து, ‘சுயவிவரத்தைத் திற’ என்பதைத் தேர்வுசெய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"