வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் வாட்ஸ்அப் 15 நாட்களுக்கு ஒரு முறை புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப செய்து வருகிறது.
வாட்ஸ்அப் செயலியை ஸ்மார்ட் போன், ஐ போன், லேப்டாப், டேப், கம்ப்யூட்டர் எனப் பலவற்றில் பயன்படுத்தலாம். ஆடியோ கால், வீடியோ கால், டெக்ஸ்ட் என அனைத்து வசதிகளையும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் ஆடியோ, வீடியோ கால் போன்களில் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் டெஸ்க்டாப்பில் ஆடியோ, வீடியோ கால் செய்து பயன்படுத்தலாம். டெஸ்க்டாப்பில் 8 பேர் வரை குரூப் வீடியோ கால் செய்ய முடியும். அனைத்து அழைப்புகளும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை ஆகும்,
வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் ஆடியோ, வீடியோ கால்
- முதலில் உங்கள் கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ்அப் ஓபன் செய்யவும். வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தவும். உங்கள் போன் QR code ஸ்கேன் செய்து ஓபன் செய்யவும்.
- இப்போது contact பக்கம் சென்று யாருக்கு கால் செய்ய வேண்டுமோ அந்த சேட்-டை ஓபன் செய்யவும்.
- மொபைல் வாட்ஸ்அப் போலவே, கால் செய்வதற்கான ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கால் செய்யலாம்.
நீங்கள் வீடியோ கால் செய்ய விரும்பினால், மைக்ரோஃபோன், கேமரா மற்றும் ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டு சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். ஆடியோ காலில் இருந்தே வாட்ஸ்அப் வீடியோ காலிற்கும் மாறிக் கொள்ளலாம். கேமரா ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் கால் வசதிகளை மாற்றிக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“