Advertisment

பெயர், போன் நம்பர், முகவரி; பான் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? இதை பாருங்க

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வீட்டில் இருந்தபடியே பான் கார்டில் திருத்தம் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
pan-1-1.webp
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பான் கார்டு மிக முக்கிய ஆவணமாகும். குறிப்பாக வருமான வரி, வங்கி கணக்கு சேவை உள்ளிட்ட பணிகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தவர்கள் பான் கார்டு பெறலாம். அண்மையில் மத்திய அரசு பான் அட்டை உடன் ஆதார் அட்டை இணைப்பதை கட்டாயமாக்கியது. இந்நிலையில், பான் அட்டையில் பெயர், போன் நம்பர், முகவரி உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், ஆன்லைனில் எளிதாக செய்யலாம்.  மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இந்த திருத்தங்களை செய்யலாம். 

Advertisment

1.  மத்திய அரசின் NSDL என்ற  அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்லவும். அங்கு 'Application Type' மெனுவிலிருந்து Changes or correction to existing PAN data‘ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும். 

2.  அதேசமயம் மத்திய அரசின் மற்றொரு இணையதளமான UTIITSL-ல் ஹோம் பக்கத்தில் உள்ள ‘Change/ Correction in PAN card‘  ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.  அடுத்து ‘Apply for Change/ Correction in PAN card details‘ என்பதை கொடுக்கவும். 

3.  அடுத்து ‘Digital‘ ஆப்ஷன் கிளிக் செய்யவும். இதற்கு ஆதார் கார்டு உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் வைத்திருக்க வேண்டும். 

4.  இப்போது தேவையான விவரங்களை நிரப்பி, என்ன திருத்தம் செய்ய வேண்டும் என்பதை உள்ளிட்டு ஆவணங்களை பதிவிடவும். 

5. இதற்கு சேவை கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். இதை செலுத்தி விவரங்களை சரிபார்த்து Submit கொடுத்தால் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பபடும். புதிய பான் அட்டை அஞ்சல் மூலம் அனுப்பபடும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

Pan Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment