வாட்ஸ் ஆப் ஸ்டிக்கரில் உங்கள் முகமும் வரும்... இப்படி ட்ரை பண்ணுங்கள்

ஹன்சா வர்மா

Whatsapp stickers : செல்போன் சேட்டிங் ஆப்களில் தற்போது பிரபலமாக இருக்கும் வாட்ஸ் ஆப்பில் புதிய வரவு ஸ்டிக்கர்ஸ். அதில் உங்கள் முகத்தையும் வைக்கலாம்.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் பிரபலமான ஆப் வாட்ஸ் ஆப் தான். இந்தியர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆப், சில வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியது. முகநூல் நிர்வாகத்தில் எப்போது கை மாறியதோ அன்று முதல் ஏதேதோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

Whatsapp stickers

அந்த வகையில், இம்மாதத்தின் புதிய வரவு தான் வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்ஸ் (Whatsapp stickers). ஸ்மைலி, ஜிஃப் போலவே இந்த ஸ்டிக்கர்ஸும் ஒரு டிரெண்டாக மாறிவிட்டது. ஃபேஸ்புக் மெச்சன்ஜர், ஹைக் செயலிகளில் இருப்பது போலவே இனி வாட்ஸ் ஆப் உபயோகிப்பவர்களும் ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்தலாம்.

Whatsapp stickers : வாட்ஸ் ஆப்பில் கஸ்டம் ஸ்டிக்கர்ஸ் செய்வது எப்படி

முதலில் ஸ்டிக்கர்ஸ் கேலரியில், வித விதமாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டிக்கர்ஸ் கொடுக்கப்பட்டது. அவற்றை டவுன்லோடு செய்து நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால் இப்போது உங்களுக்காகவே ஒரு புதிய ஆப்ஷன் வந்துள்ளது.

Whatsapp stickers

இனி அவர்கள் கொடுக்கும் ஸ்டிக்கர்ஸ் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் முகத்தை கொண்டு கூட வெவ்வேறு முகபாவனைகளை வைத்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம். ஆனால் அதை செய்வது எப்படி? இதோ உங்களுக்காக சொல்கிறோம் நோட் செய்யுங்கள்:

  • கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ‘ஸ்டிக்கர் மேக்கர் ஃபார் வாட்ஸ் ஆப் (Sticker maker for WhatsApp) என்ற செயலியை டவுன்லோடு செய்யவும்.
  • பின்னர், அதில் ஸ்டிக்கர் உருவாக்க ஒரு ஆப்ஷன் இருக்கும் (Create a new sticker pack). அதை க்ளிக் செய்யவும்.
  • இது உங்களை ஒரு பேனலுக்கு அழைத்துச் செல்லும். அதில் இந்த ஸ்டிக்கர்ஸ் பேக்கஜுக்கு ஒரு பெயர் வைக்க சொல்லும். மானே தேனே என்று மனம் போல் பெயர் வைத்துக்கொள்ளலாம். இதில் நீங்கள் உங்கள் முகம் கொண்ட 30 வகை ஸ்டிக்கர்ஸ் உருவாக்கலாம்.
  • பின்பு அது ஒரு ஆப்ஷன் போல தென்படும். என்னடா இது? ஸ்டிக்கர் போல காண்பிக்கவில்லையே என்று டென்ஷன் ஆக வேண்டாம். அது ஸ்டிக்கர் ஆப்ஷன் தான்.
  • இப்போது ஆட் ஸ்டிக்கர் என்று கொடுங்கள். பின்பு உங்களுக்கு என்ன புகைப்படம் வேண்டுமோ அதை க்ளிக் செய்யுங்கள்.
  • அந்த புகைப்படத்திற்கு கீழே உள்ள எடிட்டிங் வசதி கொண்டு பேக்ரவுண்டு அனைத்தையும் தூக்கிவிடுங்கள்.
  • இறுதியாக ஆட் டூ ஸ்டிக்கர் என்று கொடுங்கள். அவ்வளவு தான் ஸ்டிக்கர்ஸ் ரெடி

ஸ்டிக்கர்ஸ் அனுப்பு என்ஜாய் பண்ணு.

மேலும் பல விவரங்களுக்கு இதை க்ளிக் செய்யவும்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close