/indian-express-tamil/media/media_files/2025/08/24/gmail-account-2025-08-24-22-53-47.jpg)
credit: Tharon Green/CNET
உங்கள் ஜிமெயில் அக்கவுண்டின் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டால், உடனடியாக சில ஆக்சன் எடுப்பது அவசியம். கூகிள் டிரைவ், கூகிள் போட்டோஸ் போன்ற கூகிள் சேவைகள் அனைத்திற்கும் சேர்த்து 15 GB இலவச சேமிப்பகத்தை ஜிமெயில் வழங்குகிறது. ஆனால், காலப்போக்கில் மெயில், பைல்ஸ், பேக்கப்கள் மற்றும் பிற பைல்களால் இந்த ஸ்டோரேஜ் நிரம்பிவிடுகிறது. இதனை சுத்தம் செய்வது கடினமானது என்று தோன்றலாம். ஆனால், உங்கள் தினசரி வேலைகளைப் பாதிக்காத வகையில், ஸ்டோரேஜை மீண்டும் பெற சில எளிய மற்றும் பயனுள்ள வழிகள் உள்ளன.
1. தேவையற்ற மின்னஞ்சல்களை நீக்குங்கள்
மின்னஞ்சல்கள், குறிப்பாக ஸ்பேம், செய்திகள் மற்றும் விளம்பர மின்னஞ்சல்கள் உங்கள் ஜிமெயில் ஸ்டோரேஜை வேகமாக நிரப்பும். தேவையற்ற மின்னஞ்சல்களைத் தொடர்ந்து நீக்குவது, சேமிப்பகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
உங்கள் பிரவுசர் அல்லது மொபைல் சாதனத்தில் ஜிமெயிலை திறக்கவும். உங்கள் இன்பாக்ஸ், சோஷியல் அல்லது ஸ்பேம் ஃபோல்டருக்குச் செல்லவும். மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்து, செய்திகளை வடிகட்டவும். நீக்க விரும்பும் மின்னஞ்சல்களை தேர்ந்தெடுக்கவும் அல்லது ஃபோல்டரில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் தேர்ந்தெடுக்க பெட்டியில் டிக் செய்யவும்.
"நீக்கு" (Delete) பட்டனை கிளிக் செய்யவும். இந்த மின்னஞ்சல்கள் குப்பைத்தொட்டிக்குச் (Trash) சென்றுவிடும். நீங்கள் படிக்காத அல்லது படித்த மின்னஞ்சல்களை நீக்க, தேடல் பட்டியில் label:unread அல்லது label:read என டைப் செய்து என்டர் செய்யவும். காட்டப்படும் அனைத்து மின்னஞ்சல்களையும் தேர்ந்தெடுக்க, பெட்டியைக் கிளிக் செய்யவும். பின்னர், "இந்த தேடலுடன் பொருந்தும் அனைத்து உரையாடல்களையும் தேர்ந்தெடுக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களையும் நீக்க, நீக்கும் ஐகானைக் கிளிக் செய்யவும்.
2. ஸ்பேம் & ரீசைக்கிள் பின் ஃபோல்டர்களை சுத்தம் செய்யுங்கள்
மின்னஞ்சல்களை நீக்கிய பிறகும், அவை ரீசைக்கிள்பின் மற்றும் ஸ்பேம் ஃபோல்டர்களில் இருக்கும் வரை, சேமிப்பகத்தை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கும். அவற்றை நிரந்தரமாக நீக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஜிமெயிலில் உள்ள குப்பைத்தொட்டி (Trash) மற்றும் ஸ்பேம் (Spam) ஃபோல்டர்களுக்குச் செல்லவும். கூடுதல் இடத்தை விடுவிக்க, "Empty Trash now" அல்லது "Delete all Spam messages now" என்பதைக் கிளிக் செய்யவும்.
3. தேவையில்லாத மின்னஞ்சல்களிலிருந்து விலகுங்கள் (Unsubscribe)
விளம்பர மின்னஞ்சல்களும் செய்திகளும் உங்கள் இன்பாக்ஸை நிரப்பி, ஸ்டோரேஜை ஆக்கிரமிக்கின்றன. எதிர்காலத்தில் இதுபோன்று மின்னஞ்சல்கள் குவிவதைத் தடுக்க:
ஒரு விளம்பர மின்னஞ்சலைத் திறக்கவும். மின்னஞ்சலின் கீழே உள்ள “Unsubscribe” என்பதைக் கிளிக் செய்யவும். வேகமாக குழுவிலிருந்து விலக, ஜிமெயிலின் "Unsubscribe" பொத்தானைப் பயன்படுத்தவும். இந்த நடவடிக்கை எதிர்கால மின்னஞ்சல் குவியலைக் குறைத்து, ஸ்டோரேஜ் சேமிக்க உதவும்.
4. மின்னஞ்சல் நிர்வாகத்திற்கு Filters பயன்படுத்துங்கள்
ஜிமெயிலின் பில்டர் செயல்பாடு, மின்னஞ்சல் அமைப்பை துரிதப்படுகிறது. பில்டர் மின்னஞ்சல்களை ஃபோல்டர்களாகப் பிரிப்பது அல்லது கோப்புகளை கூகிள் டிரைவில் சேமிப்பது போன்ற செயல்களால், சேமிப்பகத்தை நிர்வகிக்க உதவுகிறது. ஜிமெயிலில் உள்ள தேடல் பட்டியில் கிளிக் செய்து, அளவுகோல்களை (உதாரணமாக, குறிப்பிட்ட அனுப்புநர்கள் அல்லது தலைப்புச் சொற்கள்) உள்ளிடவும்.
கிரியேட் போல்டர் என்பதைக் கிளிக் செய்து, மின்னஞ்சல்களை தானாக நீக்குதல், காப்பகப்படுத்துதல் அல்லது லேபிள் செய்தல் போன்ற ஒரு செயலைத் தேர்ந்தெடுக்கவும். பில்டர் பயன்படுத்துவதன் மூலம், கைமுறையாகச் செய்யும் வேலை குறையும் மற்றும் உங்கள் இன்பாக்ஸின் சேமிப்பகம் சிறப்பாக நிர்வகிக்கப்படும்.
5. கூகிள் போட்டோஸில் உள்ள பழைய & நகல் போட்டோஸை நீக்குங்கள்
கூகிள் போட்டோஸ் ஸ்டோரேஜ் உங்கள் ஜிமெயில் சேமிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் அதிக இடத்தை ஆக்கிரமிக்கும். கூகிள் போட்டோஸில் இடத்தை சுத்தம் செய்ய:
உங்கள் பிரவுசர் அல்லது மொபைல் செயலியில் கூகிள் போட்டோஸைத் திறக்கவும். நீங்கள் நீக்க விரும்பும் புகைப்படங்கள் (அ) வீடியோக்களை தேர்ந்தெடுத்து, மேல் இடதுபுறத்தில் உள்ள டிக் மார்க் ஐகானைக் கிளிக் செய்யவும். குப்பைத்தொட்டி ஐகானைக் கிளிக் செய்து, “Move to trash” என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும். அவற்றை நிரந்தரமாக நீக்க, குப்பைத்தொட்டி ஃபோல்டருக்குச் சென்று “Empty trash” என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள ஸ்டோரேஜை எளிதாக சுத்தம் செய்யலாம். உங்கள் மின்னஞ்சல் மற்றும் சேமிப்பகத்தைத் தொடர்ந்து பராமரிப்பதன் மூலம், நீங்கள் ஒழுங்கமைந்திருக்கலாம் மற்றும் சேமிப்பகம் தீர்ந்துபோவதைத் தவிர்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.