பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்) திட்டம் 15 ஆண்டுகளில் மெச்சூரிட்டி ஆகும் மிக பிரபலமான மற்றும் நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் தற்போது அரசு ஆண்டுதோறும் 7.1% வட்டி வழங்குகிறது.
PPF கணக்கை தபால் அலுவலகத்தில் தொடங்கலாம். எனினும் சில வங்கிகளிலும் இந்த வசதி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி போன்ற சில வங்கிகளும் ஆன்லைனில் பிபிஎஃப் கணக்கைத் தொடங்க அனுமதிக்கிறது. அந்த வகையில் இங்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் பி.எஃப் அக்கவுண்ட் தொடங்குவது குறித்துப் பார்ப்போம்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் பி.எஃப் அக்கவுண்ட் தொடங்குவது எப்படி?
1. உங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அக்கவுண்ட் மூலம் உங்கள் நெட் பேங்கிங் சேவையை லாக்கின் செய்யவும்.
2. அதில் Bank Accounts > PPF Accounts செல்லவும்.
3. இப்போது இங்கு கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும். அதன் பின் இ-சைன் ( E-Sign) செய்யவும்.
இப்போது ஆன்லைனில் பி.எஃப் அக்கவுண்ட் தொடங்கிய பின், உங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து ஐ.சி.ஐ.சி.ஐ பி. பி.எஃப் அக்கவுண்ட்டிற்கு பணத்தை மாற்றலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“