Advertisment

ஐ.ஆர்.சி.டி.சி சூப்பர் வசதி.. ரயிலில் உணவு ஆர்டர் இப்படி செய்யுங்க; ரொம்ப ஈஸி

Order food in train via IRCTC app : ரயில் பயணத்தின் போது ஐ.ஆர்.சி.டி.சி செயலி மூலம் ஸ்விகி, சொமேட்டோ போல் உங்கள் இருக்கைக்கே உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to order food in train via IRCTC app

Order food in train via IRCTC app :

இந்திய ரயில் சேவைகளை நாள்தோறும் ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். தொலைதூர ரயில்கள், புறநகர் ரயில்கள் உள்ளன.

தொலைதூரங்களுக்கு செல்ல ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். காரணம் மற்ற சேவைகளை விட பேருந்து, விமானத்தை விட ரயில் கட்டணம் குறைவு. குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. முன்பதிவு செய்து பயணிக்கும் போது கூடுதல் வசதி கிடைக்கிறது. ரயிலில் ஏசி படுக்கைகள், அதில் 1,2,3 என வகைகள், ஏசி அல்லாத படுக்கை பெட்டிகள், உட்கார்ந்து செல்லும் பெட்டிகள் என பயனர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயணம் செய்யலாம். அந்த வகையில் தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் போது உணவு எடுத்துச் செல்வது சில நேரங்களில் சிரமாக இருக்கும். குறைந்தது 2 நாட்கள் பயணம் என்றாலே உணவு எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும். அந்த வகையில் ஐ.ஆர்.சி.டி.சி பயனர்களின் வசதிக்கு ஏற்ப ரயிலிலேயே உணவு வழங்கி வருகிறது. ஸ்விகி, சொமேட்டோ போல் உங்கள் இருக்கைக்கே உணவு கொண்டு வந்து கொடுக்கப்படும். உங்கள் போன் மூலம் ஆர்டர் செய்தால் உங்கள் இருக்கைக்கே உணவு கொண்டு வந்து கொடுக்கும் படி வசதி செய்யப்பட்டுள்ளது.

உணவு ஆர்டர் செய்ய 6 சிம்பிள் ஸ்டெப்ஸ்

  1. IRCTC Rail Connect செயலியை டவுன்லோடு செய்யவும்.
  2. அடுத்து உங்கள் IRCTC கணக்கு கொண்டு லாக் இன் செய்யவும்.
  3. இப்போது ‘more’ என ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  4. Scroll down செய்து ‘order/ cancel food’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  5. அடுத்தாக நீங்கள் பயணம் செய்யும் ரயில் பெயர், உங்கள் டிக்கெட் PNR எண் மற்றும் உங்கள் பயண விவரங்களை குறிப்பிடலாம்.
  6. இப்போது உங்கள் பிடித்தமான உணவுகளை ஆர்டர் செய்து proceed கொடுத்து பணம் செலுத்தவும். அவ்வளவு தான் உங்கள் உணவு ஆர்டர் செய்யப்பட்டு விட்டது. குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பயணம் செய்தாலும் 15க்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் கூட உணவு ஆர்டர் செய்யலாம்.
Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment