வாட்ஸ் அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. டான்ஜெட்கோ (TANGEDCO) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பொது மக்களின் வசதிக்கேற்ப பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் ஆன்லைன் ஆப், இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி உள்ள நிலையில் தற்போது சமீபத்தில் வாட்ஸ் அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்தது. இதன் மூலம் சுலபமாக (UPI) வாயிலாக மின்கட்டணம் செலுத்தலாம்.
வாட்ஸ்அப் மூலம் இ.பி கட்டணம் செலுத்துவது எப்படி?
1. முதலில் உங்கள் போனில் '94987 94987' என்ற எண்ணை பதிவு செய்யவும்.
2. இப்போது வாட்ஸ்அப் பக்கம் வந்து இந்த contact-ஐ தேடி எடுக்கவும். வாட்ஸ்அப்-ல் வந்த இந்த நம்பருக்கு பின் க்ரீன் டிக் மார்க் உள்ளதாக என்பதை உறுதி செய்யவும். அப்போது தான் இது மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ எண் என்று உறுதி செய்யப்படும்.
3. அடுத்து அந்த எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்.
4. மெசேஜ் அனுப்பிய உடன் "Pay Bill" and "View Bill" என்று 2 ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.
5. இதில் "Pay Bill" கொடுக்கவும்.
6. இப்போது யு.பி.ஐ ஆப்ஷன்கள் (கூகுள் பே, போன் பே) காண்பிக்கப்படும்.
7. இதில் ஒன்றை செலக்ட் செய்து நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“