கூகுள் பே மூலமாக மின் கட்டணத்தை செலுத்துவது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ் பாருங்க!

Electricity Bill Payment Online-Pay Electric bills using Google Pay: நீண்ட வரிசையில் ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள்? வீட்டில் இருந்தப்படியே ஸ்மார்ட்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை இங்கே காணலாம்.

மின்சார கட்டணத்தை நேரடியாக EB அலுவலகத்திற்கு சென்று கட்டுவது பெரிய சிரமமான பணியாகும். மாத கடைசியில் சென்றால், பணம் கட்டுவதற்கு பெரிய கூட்டமே வரிசையில் காத்திருப்பதை காண முடியும். இத்தகைய சிரமங்களை போக்கிட, உட்கார்ந்த இடத்திலே ஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்திவிடலாம். மிகவும் வேகமாகவும், இஸியாகவும் பணத்தை செலுத்திவிட முடியும்.

ஒன்று, Tamilnadu Electrity, அதானி, மகாவிதரன் போன்ற இணையதளங்கள் வாயிலாக மின்சார கட்டணத்தை செலுத்தலாம். மற்றொரு ஈஸி வழி, மொபைலில் வைத்திருக்கும் கூகுள் பே, பேடிஎம் செயலிகள் மூலமாக எளிதாக கரண்ட் பில் கட்டிவிடலாம். இந்த முறையை பயன்படுத்தி பணம் செலுத்துகையில், கேஷ்பெக் ஆஃபர்களும், வவுச்சர்களும் கிடைத்திடும்.

கூகுள் பே செயலி வாயிலாக மின்சார கட்டணத்தை செலுத்தும் வழியை இங்கே காணலாம்.

குறிப்பு: இந்த பிராசஸ் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் கூகுள் பே கணக்குடன் வங்கி கணக்கை இணைத்துவிடுங்கள்.

  • முதலில் கூகுள் பே ஹோம்பேஜ்ஜில் தோன்றும் ஷாட்கட்களில் ‘Pay Bills என்பதை கிளிக் செய்யுங்கள்
  • அடுத்து தோன்றும் பக்கத்தில், ‘Electricity’ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.
  • தொடர்ந்து, கரண்ட் ஏஜென்சியை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படும். அதிலிருக்கும் விருப்பங்களில் Tamilnadu Electrity(TNEB) தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அடுத்த திரையில், உங்கள் கன்ஸ்யூமர் நம்பர் மற்றும் பில்லிங் யூனிட் நம்பர் கேட்கப்படும். இது, உங்கள் வீட்டின் மீட்டரை துல்லியமாக கண்டறிய உதவியாக இருக்கும்
  • மேலும், உங்கள் கணக்கிற்கு Nickname டைப் செய்யும் அறிவுறுத்தப்படும். இது ஒரே பல வீடுகளின் மின்சார கணக்குகளை செலுத்த பல கணக்குள் திறக்கும் போது, உதவியாக இருக்கும்.
  • இந்த பிராசஸ் முடிந்தால், திரையில் உங்கள் வீட்டிற்கான கரண்ட் பில் எவ்வளவு என்று காட்டிவிடும். அதிலேயே ஆன்லைன் மூலமாக நீங்கள் பணம் செலுத்திவிடலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to pay electricity bill online using google pay