Advertisment

ஆதார் போதும்.. போன் நம்பரை மாற்றாமல் ஏர்டெல் நெட்வொர்க்கு ஈஸியாக மாறலாம்!

உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றாமல் ஜியோ, வோடபோன், பிஎஸ்என்எல் என எந்த நெட்வொர்க் பயன்படுத்துபவராக இருந்தாலும் ஏர்டெலுக்கு ஈஸியாக மாறலாம். அதுகுறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today sensex 30 August 2022

ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாக மாறிவிட்டது. 5ஜி, 6 ஜி இணைய சேவை என தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய 4 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன.

Advertisment

இந்நிறுவனங்கள் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு திட்டங்களை பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. அந்தவகையில் பயனர்கள் தங்களது விரும்பமான நெட்வொர்க்கை தேர்வு செய்து பயன்படுத்தலாம். ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு எளிதாக மாறலாம். இங்கு நெட்வொர்க்கிலிருந்து ஏர்டெல் நெட்வொர்க்கு மாறுவது குறித்து பார்க்கலாம்.

உங்கள் சிம்மை ஏர்டெல் ப்ரீபெய்டு போர்டாக மாற்ற, ஆதார் அல்லது வேறு அடையாள அட்டை இருந்தால் போதும். 1 அல்லது 2 நாட்களில் ஏர்டெல் நெட்வொர்க்கு மாறிவிடலாம். ஜியோ, விஐ, பிஎஸ்என்எல் என எந்தப் பயனராக இருந்தாலும் மொபைல் எண்ணை மாற்றாமல் ஏர்டெலுக்கு மாறலாம்.

  1. முதலில் ஏர்டெல் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு மெனுவிலிருந்து ஏர்டெல் ப்ரீபெய்டு விருப்பத்தை கிளிக் செய்து 'போர்ட் டு ஏர்டெல் ப்ரீபெய்டு' (Port to Airtel Prepaid) ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  3. இப்போது, ​​ MNP (Mobile Number Portability) process தொடங்க ஏர்டெல் வழங்கும் ப்ரீபெய்டு திட்டத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ரூ. 299 முதல் திட்டம் தொடங்குகிறது.
  4. ஏர்டெல் சிம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும். அதற்காக KYC படிவத்தை நிரப்ப வேண்டும்.
  5. பெயர், முகவரி, நீங்கள் நெட்வொர்க் மாற்ற விரும்பும் தொலைபேசி எண் மற்றும் சில விவரங்களை குறிப்பிட வேண்டும். குறிப்பு: சிம் கார்டில் பதிவுசெய்யப்பட்ட நபரின் பெயரை உள்ளிடவும்.
  6. அனைத்து விவரங்களையும் கொடுத்த பிறகு, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். 'Submit' ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
  7. அதன்பின் ஏர்டெல் நிர்வாகி உங்களை தொடர்பு கொள்வார்.
  8. சிம் டெலிவரியின் போது, ஏர்டெல்லில் இருந்து எட்டு இலக்க எண்கள் கொண்ட (Unique Porting Code)கோடு அனுப்பபடும். அதை நிர்வாகியிடம் பகிர வேண்டும்.
  9. 2 நாட்கள், 48 மணி நேரத்தில் ஏர்டெல் நெட்வொர்க்கிற்கு மாறிவிடும்.
  10. சிம் டெலிவரி செய்யும்போது, ஏர்டெல் நிர்வாகியிடம் ரூ.100 சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.
  11. சிம் புக் செய்யதவுடன் உங்கள் சிம் processயை Airtel Thanks Appயில் உங்கள் போர்ட்-இன் எண்ணைப் பயன்படுத்தி டிராக் செய்யலாம்.
  12. இது உங்களுக்கு கடினமாக இருந்தால் அருகில் உள்ள ஏர்டெல் ஸ்டோருக்கு சென்று தகவல் பெறலாம்.
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment