scorecardresearch

Gmail storage hack: ஆயிரக்கணக்கான மெயிலை ஒரே கிளிக்கில் டெலிட் செய்யும் ஈஸி வழி

Gmail free storage, Gmail Storage Space, how to clean up gmail space ஜிமெயில் filter அம்சத்தை பயன்படுத்தி, முக்கியமானவற்றை இழக்காமல் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை நீக்கலாம். அது எப்படி என்பதை இங்கே காணலாம்.

Gmail storage space hack

உலகம் முழுதும் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில் ஜிமெயில் ஒன்றாகும். தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக ஜிமெயில் பயன்படுத்தப்படுகிறது. பல விதமான சேவைகளுக்கு வழங்கப்பட்ட அதே இமெயில் ஐடியை, தொழில் சம்பந்தமான பணிகளுக்கும் வழங்கியிருப்போம்.

இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான மெயில்கள் வர, உங்கள் ஜிமெயில் ஸ்டோரேஜ் விரைவில் ஃபுல் ஆகிட வாய்ப்புள்ளது. அச்சமயத்தில், மெயில்களை டெலிட் செய்திட பல வழிகள் இருந்தாலும், அதில் சிறந்த வழியை தான் இச்செய்தி தொகுப்பில் தெரிவித்துள்ளோம். நிச்சயம் உங்களுக்கு உதவியாக அமைந்திடும்.

ஸ்டோரேஜ் கிளியர் செய்வது எப்படி?

நீங்கள் எளிதாக ஜிமெயில் filter ஆப்ஷனை உபயோகித்து, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மெயில்களை டெலிட் செய்திட முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான், மேலே உள்ள சேர்ச் பாரில் வலதுப்புற ஒரத்தில் உள்ள filter ஐகானை கிளிக் செய்வது மட்டும் தான். அப்போது, உங்கள் திரையில், மேலே ”From” என எழுதப்பட்டிருக்கும் பாக்ஸ் தோன்றும். அதில், உங்களுக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கும் சேவையின் பெயர் அல்லது இமெயில் ஐடியை பதிவிட வேண்டும்.

அடுத்து, நீங்கள் சேர்ச் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக, சம்பந்தப்பட்ட ஐடியில் இருந்து வந்த அனைத்து மெயில்களும் திரையில் தோன்றும். அதனை ஒரே நேரத்தில் டெலிட் செய்துவிடலாம். அதற்கு, டாப்பில் இடது கார்னரில் உள்ள small square boxஐ கிளிக் செய்தால், அனைத்து மெயில்களும் சேலக்ட் ஆகிவிடும். உதாரணமாக, சொமேட்டோ என டைப் செய்து, சேர்ச் பட்டன் கிளிக் செய்தால், ஒரே நேரத்தில் சொமேட்டோவிடம் இருந்து வந்த அனைத்து மெயில்களையும் டெலிட் செய்யலாம்.

ஜிமெயிலின் மொபைல் வெர்ஷனுக்கும், இதே செயல்முறையை பயன்படுத்தலாம். அங்கு, மேலே உள்ள சேர்ச் பாரை டேப் செய்தால் போதும், From என எழுதும் திரை அதன் கீழே தோன்றும். அதை கிளிக் செய்தால், உங்களுக்கு பல இமெயில் ஐடிக்கான பரிந்துரை காண்பிக்கப்படும்.

அதில், டெலிட் செய்ய விரும்புவதை தேர்வு செய்யலாம். இல்லையெனில், நீங்களே டைப்பும் செய்துக்கொள்ளலாம். ஆனால், டெலிட் செய்யும் விரும்பும் மெயில்களை நீங்கள் தான் டிக் செய்திட வேண்டும். எல்லாவற்றையும் டிக் செய்கையில் பொறுமையை இழக்கக்கூடும். எனவே, ஜிமெயிலில் மெயிலை டெலிட் செய்திட, சிஸ்டம் உபயோகிப்பது சிறந்த சாய்ஸ் ஆகும்.

அதேபோல், நீங்களே கையாலே சேலக்ட் செய்தும், மெயில்களை டெலிட் செய்திட முடியும். ஆனால், அதற்கு நீண்ட நேரம் எடுக்கும். சிலர் இறுதியில், புதிய மெயிலை ஓப்பன் செய்துக்கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். எனவே, உங்கள் ஜிமெயிலில் குறைவான மெயில் இருந்தால், கையாலே தேர்வுசெய்து டெலிட் செய்யுங்கள். மாறாக, அதிகளவில் இருக்கும்பட்சத்தில், Gmail Filter ஆப்ஷனை உபயோகிப்பது சிறந்த சாய்ஸ் ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to quickly fix gmail storage full issue