Advertisment

வாட்ஸ்அப்பில் நீங்கள் இதுவரை அறியாத வசதிகள்.. அதன் பயன் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

வாட்ஸ்அப் பாப்-அப், வாட்ஸ்அப் விட்ஜெட், read receipts ஆப்ஷங்கள் பற்றி இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வாட்ஸ்அப்பில் நீங்கள் இதுவரை அறியாத வசதிகள்..  அதன் பயன் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

வாட்ஸ்அப் பிரபலமான சமூகவலைதளம் ஆகும். ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வசதிகள் அறிமுகப்படுத்தும் போது, பயனர்களின் தனியுரிமை காப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. பிரைவசி செட்டிங்கில் மாற்றங்கள் கொண்டு வருகிறது. அந்தவகையில் அண்மையில் 3 வசதிகளை அறிமுகப்படுத்தியது.

Advertisment

நோட்டிபிகேஷன் கொடுக்காமல் குரூப்பிலிருந்து வெளியேறுவது, ‘View once’ மெசேஜை ஸ்கிரின்சாட் எடுக்க முடியாது, online status காண்பிப்பதை நிர்வகிப்பது என 3 அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதேபோன்று கணினி, லேப்டாப்பிற்கு என்று நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் அனைவரது பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டது.

வாட்ஸ்அப்பில் பயனர்களின் தேவைக்கு ஏற்ப பல வசதிகள் உள்ளன. ப்ளூ டிக், ஆன்லைன் ஸ்டேடஸ் நிர்வகிப்பது எனப் பல உள்ளன. அந்தவகையில் ப்ளூ டிக் ஆப்ஷன் ஆப் செய்தால், மற்றவர்கள் அனுப்பிய செய்தி நீங்கள் படித்து விட்டீர்கள் என்றாலும் அது அவர்களுக்கு தெரியாது. ப்ளூ டிக் ஆப்ஷன் நிர்வகிப்பதில் சிக்கல் இருந்தால், வேறு சில வழிகளும் உள்ளது. அனுப்பியவருக்கு தெரியாமல் செசேஜை படிக்க சில வழிகள்.

நோட்டிபிகேஷனில் செசேஜ் பார்ப்பது

இது எளிமையான வாட்ஸ்அப் ட்ரிக் என்று கூறலாம். செசேஜ் வந்தவுடன் நோட்டிபிகேஷனில் யார் அனுப்பியுள்ளார்கள் என தெரிந்து விடும். அந்தவகையில் நோட்டிபிகேஷன் பாரில் செசேஜை ஸ்லைடு டவுன் செய்து படிக்கலாம். அப்படி செய்யும்போது, அனுப்பியவருக்கு தெரியாமல் மெசேஜ் படிக்க முடியும்.

வாட்ஸ்அப் பாப்-அப்

வாட்ஸ்அப் பாப்-அப் 'WhatsApp Pop-ups' வசதி பலருக்கும் தெரியாத ஒன்றாகும். மெசேஜ் நோட்டிபிகேஷனுடன், வாட்ஸ்அப் பாப்-அப் நோட்டிபிகேஷனும் வரும்.

இதைப் பயன்படுத்த: வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று செலக்ட் நோட்டிபிகேஷன் ஆப்ஷனுக்குள் சென்று பாப்-அப் நோட்டிபிகேஷன் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். பின் 3 ஆப்ஷன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஏதோ ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். Only when the screen is "off”, Always show pop-up, or Only when screen is "on”. இதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் விட்ஜெட்

வாட்ஸ்அப் விட்ஜெட் (WhatsApp widget) ஆண்ட்ராய்டு போன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது. வாட்ஸ்அப் விட்ஜெட்டை ஹோம் ஸ்கிரினில் வைத்து வாட்ஸ்அப் செயலியை திறக்காமல் மெசேஜை படிக்கலாம்.

read receipts ஆப்ஷன்

பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அனுப்புநரின் செய்திகளை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்த விரும்பவில்லை என்றால்
read receipts ஆப்ஷனை ஆப் செய்து விடலாம்.

இதற்கு, வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று Open Accounts ஆப்ஷனுக்குள் சென்று பிரைவசி பட்டனை செலக்ட் செய்து turn off the read receipt ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment