பே.டி.எம் ஆப் சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, பயனர்கள் பே.டி.எம் ஆப் மூலம் தங்கள் ஃபாஸ்ட்டேக் ரீசார்ஜ் செய்யும் வகையில் புதிய அப்டேட் வெளியிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி Paytm Payments Bank Limited (PPBL) மீதான நடவடிக்கைக்குப் பின் பே.டி.எம் இதை அறிமுகப்படுத்தியது.
பே.டி.எம் ஆப் மூலம் பாஸ்ட்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி?
1. பே.டி.எம் ஆப் சென்று ‘Bill Payments’ செக்ஷன் செல்ல வேண்டும். அதில் FASTag Recharge ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
2. இப்போது உங்கள் FASTag கணக்கு உள்ள வங்கியை செலக்ட் செய்யவும்.
3. அடுத்து ஃபாஸ்ட்டேக் லிங்க் செய்யப்பட்ட வண்டி எண்ணை பதிவிட்டு Proceed கொடுக்கவும்.
4. இப்போது விவரங்களை சரிபார்த்து, ரீசார்ஜ் கட்டணத்தை உள்ளிடவும்.
5. Proceed to Pay கொடுத்து கட்டணத்தை செலுத்தவும்.
6. இப்போது ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகை FASTag கணக்கில் வந்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“