ஃபேஸ்புக் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்!

இது மிகவும் பாதுகாப்பானது என்றும் ஃபேஸ்புக் உறுதியளித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம்  யூசர்களை மகிழ்விக்கும் வகையில்,  மொபைல் ரீசார்ஜ் வசதியை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் யூசர்கள் ரீசார்ஜ் செய்வதற்காக பல்வேறு  செயலிகளை உபயோகிப்பதை அறிந்த ஃபேஸ்புக் நிறுவனம் , அதை எளிதாக்க இந்த புதிய வசதியை உருவாக்கியுள்ளது. கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஃபேஸ்புக்கில் இருந்தப்படியே நாம் நாம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், இது மிகவும்  பாதுகாப்பானது என்றும் ஃபேஸ்புக் உறுதியளித்துள்ளது.

முதற்கட்டமாக ரீசார்ஜ் செய்யும் வசதி ஆன்ட்ராய்டு ஃபேஸ்புக் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த சிலகாலம் காத்திருக்க வேண்டும்.  இதோ ஃபேஸ்புக்கில் ரீசார்ஜ் செய்வதற்கான புதிய வழிமுறை:

 

-பேஸ்புக்கில் மொபைல் டாப் அப் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்

– இனி மொபைல் நம்பர் மற்றும் ரீசார்ஜ் தொகையை தேர்வு செய்ய வேண்டும். இங்கு குறிப்பிட்ட நெட்வொர்க் வழங்கும் சிறப்பு சலுகைகளை பார்த்து அவற்றை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

– ரீசார்ஜ் தொகையை கட்டணம் செலுத்துவதற்கான பக்கத்தில் சென்று பண பரிமாற்ற முறையை தேர்வு செய்து பணம் செலுத்தலாம். இங்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மொபைல் ரீசார்ஜ் அம்சத்தில் தற்சமயம் வரை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படும் நிலையில், யுபிஐ அல்லது மற்ற மொபைல் வாலெட் கொண்டு பணம் செலுத்தும் வசதி வழங்கப்படவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close