Advertisment

உங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக்? கவலை வேண்டாம்... மீட்கும் வழி இங்கே..!

உங்கள் பாஸ்வேர்டு யூகிப்பதன் மூலமோ அல்லது ஹேக்கிங் தொழில்நுட்பம் மூலமோ மட்டுமே ஒருவரால் உங்கள் பேஸ்புக் கணக்கின் அணுகலை பெற முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உங்க ஃபேஸ்புக் தகவல் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வது எப்படி?

அண்மை காலங்களாக உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக கூறுவதை காண முடிந்திருக்கும். நீங்கள் காலையில் எழுந்துபார்க்கையில், உங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதிலிருக்கும் புகைப்படங்கள், சாட், தனிப்பட்ட தகவல்கள் மற்றவரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக தெரிவித்தால், அச்சமடைய தேவையில்லை. அதனை எளிதாக உங்கள் கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டுவரலாம்.

Advertisment

பேஸ்புக் கணக்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹேக் செய்யலாம் அல்லது பாஸ்வேர்டை கணித்தும் ஊடுவியிருக்கலாம். உங்கள் இமெயில் அல்லது பாஸ்வேர்டு மாறியிருந்தாலோ, பெயர் அல்லது பிறந்ததேதி மாறியிருந்தாலோ, உங்கள் நியூஸ்பீட்டில் எதாவது போஸ்ட் பண்ணியிருந்தாலோ போன்றவற்றை வைத்து பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லாதை என்பதை கண்டறியலாம்.

இதில் ஏதெனும் ஒன்று உறுதியாகும் பட்சத்தில், முதலில் பாஸ்வேர்டை மாற்றியமைக்க வேண்டும்.

  • Privacy and Settingsக்கு செல்ல வேண்டும்.
  • அதில், "Password and Security" சேலக்ட் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, change password கொடுத்து, பாஸ்வேர்டை மாற்றியமைக்க வேண்டும்.

அதே சமயம், Password and Security பேஜ்ஜில் உங்கள் கணக்கு லாகின் செய்யப்பட்டுள்ள சாதனங்களை பார்வையிட முடியும். "Where You're Logged in" சேலக்ட் செய்தால், அதில் வரும் ட்ராப் டவுன் மேனுவில் கணக்கு லாகின் செய்யப்பட்ட சாதனங்கள் தோன்றும், அதில் ஏதெனும் தெரியாத சாதனங்கள் இருந்தால், உடனடியாக அக்கவுண்டை செயலிழக்க செய்ய வேண்டும்.

  • முதலில் Suspicious Login கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து, Secure Account தேர்ந்தெடுக்க வேண்டும்
  • தொடர்ந்து, கணக்கை பாதுகாத்திட கூறும் ஸ்டெப்ஸ்களை ஃபாலோ செய்ய வேண்டும்.

பேஸ்புக் அதிகாரியை ஹேல்ப் பேஜ் மூலம் தொடர்பு கொள்ளலாம்

  • Security and Passwords page செல்ல வேண்டும்.
  • அதில், Get Help கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஒருவேளை உங்கள் அணுகலை ஹேக்கர் லாக் செய்திருந்தால், Facebook.com/hacked தளத்திற்கு செல்ல வேண்டும். அதில், பேஸ்புக் கணக்குடன் இருக்கும் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். அப்போது, மொபைல் நம்பர் சரியாக இருந்தால், கணக்கிற்கான அணுகலை தரும் பிராசஸை பேஸ்புக் தொடங்கிடும்.

Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment