Technology Tamil News: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோலாகலமாகத் தொடங்கிய சில நாள்களிலேயே கடுமையான சில போட்டிகளையும் பார்த்துவிட்டோம். OTT இயங்குதளங்கள் திரைப்படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி விளையாட்டு நிகழ்வுகளை ஸ்ட்ரீமிங் செய்வதனால், பயனர்கள் செட்-டாப் பாக்ஸ் சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக டிவியில் ஐபிஎல் பார்ப்பதையே விரும்புகின்றனர். இது வெவ்வேறு ரிமோட்டுகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கலையும் சரிசெய்கிறது. ஸ்மார்ட் டிவி இல்லையென்றாலும் இனி கவலை வேண்டாம். ஸ்மார்ட்போன் அல்லது தொலைபேசியின் உள்ளடக்கத்தை இடமாற்றம் செய்வதன் மூலம் ஐபிஎல் மேட்சைப் பார்க்க முடியும்.
நீங்கள் அனுப்பும் வீடியோ, அனைத்து டிவி மற்றும் ஸ்மார்ட்போன்களிலிருந்தும் இயக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில்தான், ஸ்ட்ரீமிங் டாங்கில் (streaming dongle) அதன் மேஜிக்கை செய்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான ஆண்ட்ராய்டு டிவிகள் கூகுளை ஆதரிக்கும் வகையில் வருகின்றன. சில டிவிகள் Airplay-வையும் ஆதரிக்கும் வகையில் இருக்கின்றன. டிவி செட்டிங்ஸ்(settings) மூலம் உங்கள் டிவி இந்த செயல்பாடுகளை ஆதரிக்கிறதா என்பதை நீங்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.
உங்களிடம் ஸ்மார்ட் டிவி இல்லையென்றாலும், கூகுள் க்ரோம்காஸ்ட் (Google Chromecast), அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் (Amazon Fire TV Stick) மற்றும் பல ஸ்ட்ரீமிங் ஸ்டிக்ஸ்களை வயர்லெஸ் டாங்கில்களோடு இணைப்பதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் திரையை டிவியில் பிரதிபலிக்கச் செய்யமுடியும். இந்த சாதனங்களை HDMI ஸ்லாட்டில் பொருத்துவது மட்டும்தான் உங்களுடைய வேலை. இது நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், டிஸ்னி + ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற பயனர்களின் நீண்ட செயலி பட்டியலை அவர்கள் தொலைபேசியிலிருந்து டிவிக்கு அனுப்ப உதவுகிறது.
டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு ஐபிஎல் 2020 போட்டிகளை ஒளிபரப்ப உரிமை இருப்பதால், உங்கள் தொலைபேசியின் ஸ்க்ரீனை பிரதிபலிப்பதன் மூலம், இது ஒரு சிக்கலாக இருக்காது. மேலும், அதிகப்படியான செயலிகள் பயன்படுத்தும் வகையில் சொந்த interface கொண்டிருப்பதால், அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உங்களுக்குக் கூடுதல் நன்மை உண்டு. ஸ்ட்ரீமிங் சாதனம் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போன் ஒரே வைஃபை (WiFi) இணைப்பைப் பயன்படுத்துகிறதா என்பதை மட்டும் சரிபார்த்துக்கண்டால் போதும்.
HDMI வழியாக ஸ்மார்ட்போன்களை டிவியுடன் இணைக்கலாம்
பொருந்தக்கூடிய தன்மை இங்கே ஓர் முக்கிய காரணியாக இருப்பதால், இது பழைய ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே இயங்கக்கூடும். உங்கள் டிவியுடன் இணைக்க ஒரு HDMI கேபிள் மற்றும் தொலைபேசியுடன் இணைக்க ஒரு கன்வெர்ட்டர் / அடாப்டர் (converter/adapter) தேவை. உங்கள் தொலைபேசியில் டைப் C போர்ட் இருந்தால், HDMI கேபிள் டைப் B-க்கு பதிலாக டைப் C பெறுவதை உறுதி செய்ய வேண்டும். எனினும், உங்கள் தொலைபேசியின் சார்ஜிங் போர்ட் ஆக்கிரமிக்கப்படும் என்பதுதான் இதிலிருக்கும் ஒரே ட்ராபேக்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.