scorecardresearch

எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன் மொபைல் எண் இணைப்பு.. ஆன்லைனில் இப்படி ஈஸியாக செய்யலாம் !

எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன் மொபைல் எண் இணைப்பது அல்லது பழைய எண் அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

SBI
SBI Banking

எந்த வங்கியாக இருந்தாலும் உங்கள் வங்கி கணக்குடன் மொபைல் எண் இணைப்பது அவசியமாகிறது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை, வங்கி தொடர்பான எஸ்.எம்.எஸ், வங்கி பேலன்ஸ் தொகை என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வங்கி கணக்குடன் மொபைல் எண் இணைத்திருப்பது கட்டாயமாகிறது. அந்த வகையில் எஸ்.பி.ஐ எனப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்கள் என்றால் அதனுடன் மொபைல் எண் இணைப்பது குறித்து இங்கு பார்க்கலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறையிலுல் வங்கி கணக்குடன் மொபைல் எண் இணைக்கலாம். ஏடிஎம், நெட் பேங்கிங் எனப் பல்வேறு வழிகளில் இணைக்கலாம்.

ஆஃப்லைன் முறையில் மொபைல் எண் பதிவு செய்வது

அருகில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு சென்று அல்லது எஸ்பிஐ ஏடிஎம் மூலமாக இதை நீங்கள் எளிதாக செய்து கொள்ளலாம். நேரடியாக வங்கிச் சென்றாலும் இதைச் செய்ய முடியும்.

ஏடிஎம் மூலம் பதிவு செய்வது

  1. உங்கள் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்கு செல்லவும்.
  2. Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  3. இப்போது உங்கள் ஏடிஎம் பின் நம்பரை பதிவிடவும்.
  4. Mobile number registration ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  5. அடுத்தாக வரும் திரையில் change mobile number என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
  6. புதிய நம்பர் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் உங்கள் பழைய எண் அதில் டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
  7. இப்போது உங்கள் புதிய மொபைல் எண்ணை கொடுத்து confirm எனக் கொடுக்கவும்.
  8. அடுத்ததாக உங்கள் புதிய மற்றும் பழைய மொபைல் எண் இரண்டிற்கும் வெவ்வேறு OTP அனுப்பபடும். அதோடு மெசேஜ் ஒன்று அனுப்பபட்டிருக்கும்.”Please send OTP and reference number received in SMS from new as well as an existing mobile number in the following format ACTIVATE IOTP VALUE + REF NUMBER TO 567676 within 4 hours.” எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதன்படி, மேல் குறிப்பிட்டுள்ள format படி 4 மணி நேரத்திற்குள் அனுப்ப வேண்டும்.

  1. அவ்வளவு தான் இப்போது உங்கள் புதிய மொபைல் எண் வங்கி கணக்குடன் அப்டேட் செய்யப்படும்.

நேரடியாக வங்கிக்கு சென்று பதிவிடவும்

உங்கள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சென்று மொபைல் எண் பதிவு அல்லது புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தால் ஒரு படிவம் கொடுக்கப்படும். அதில் தேவையானவற்றை குறிப்பிட்டு கொடுத்தால் மொபைல் எண் அப்டேட் செய்யப்படும்.

எஸ்.பி.ஐ நெட் பேங்கிங் மூலம் அப்டேட் செய்வது?

  1. http://www.onlinesbi.com என்ற பக்கத்திற்கு செல்லவும்
  2. அங்கு profile பக்கத்திற்கு செல்லவும்.
  3. “Personal Details” என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
  4. profile password என்டர் செய்யவும்.
  5. ‘Change Mobile Number-Domestic only (Through OTP/ATM)’என்ற ஹைபர் லிங்க்கை செலக்ட் செய்யவும்.
  6. இப்போது புது திரை ஒன்று வரும். ‘Personal Details-Mobile Number Update’பக்கத்தில் 3 டேப்கள் இருக்கும்.
  7. ‘Create Request’சென்று புதிய மொபைல் எண்னைப் பதிவிடவும்.
  8. மீண்டும் புதிய மொபைல் எண்னைப் பதிவிடவும்.
  9. ‘Submit’ பட்டன் கொடுக்கவும்.
  10. உறுதி செய்வதற்காக உங்கள் புதிய எண் மீண்டும் திரையில் தோன்றும். அதை சரிபார்த்து ‘Ok’ எனக் கொடுக்கவும்.

உங்கள் புதிய எண் மற்றும் பழைய எண் இரண்டிற்கும் மெசேஜ் உடன் OTP அனுப்பபடும். இதன் பின் புதிய எண் அப்டேட் செய்யப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to register update mobile number with sbi savings account online offline