பி.டி.எப். பாஸ்வேர்டை நீக்குவது எப்படி? இது தெரிஞ்சா போதும்; இனி ஒரே நிமிடத்தில் நீக்கலாம்!

பாதுகாப்பான பிடிஎஃப் பைல்களில் உள்ள பாஸ்வேர்டை நீக்குவது சில நேரங்களில் அவசியமாகிறது. நீங்கள் ஒரு ஃபைலின் உரிமையாளராக இருந்தால் அல்லது அதை அன்லாக் செய்ய உரிமை பெற்றிருந்தால், இதற்கான பாதுகாப்பான வழிகள் உள்ளன.

பாதுகாப்பான பிடிஎஃப் பைல்களில் உள்ள பாஸ்வேர்டை நீக்குவது சில நேரங்களில் அவசியமாகிறது. நீங்கள் ஒரு ஃபைலின் உரிமையாளராக இருந்தால் அல்லது அதை அன்லாக் செய்ய உரிமை பெற்றிருந்தால், இதற்கான பாதுகாப்பான வழிகள் உள்ளன.

author-image
Meenakshi Sundaram S
New Update
PDF Password

பி.டி.எஃப். பாஸ்வேர்டை நீக்குவது எப்படி?... இது தெரிஞ்சா போதும்; இனி ஒரே நிமிடத்தில் நீக்கலாம்!

பாதுகாப்பான முறையில் ஆவணங்களைப் பகிர, பிடிஎஃப் பைல்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், சில நேரங்களில், பாதுகாப்பு அம்சமே நமக்கு இடையூறாக அமையலாம். குறிப்பாக, ஒரு ஃபைலுக்குப் பாஸ்வேர்டு போட்டிருந்தால், அதை விரைவாக அணுகுவதோ? அல்லது பிறருடன் பகிர்ந்து கொள்வதோ கடினமாகலாம். பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது அடிக்கடி பயன்படுத்தும்போது ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டிய நிலை வந்தாலோ இது ஒரு சிக்கலாக மாறும். நீங்கள் சரியான முறையில் அணுகுவதற்கு அனுமதி உள்ளவராக இருந்தால், ஒரு பிடிஎஃப் பைலில் உள்ள பாஸ்வேர்டை பாதுகாப்பான, சட்டப்பூர்வமான வழிகளில் நீக்க முடியும்.

எப்போது பி.டி.எஃப் பாஸ்வேர்டை நீக்கலாம்?

Advertisment

பிடிஎஃப் பைலின் உரிமையாளராக நீங்கள் இருந்தால் அல்லது அதைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே பாஸ்வேர்டை நீக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். உரிய அனுமதி இல்லாமல் பாதுகாப்பை நீக்குவது தனிப்பட்ட ரகசியத்தன்மை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய செயலாகும். நீங்கள் உருவாக்கிய பிடிஎஃப் பைலுக்கு இனி பாஸ்வேர்டு பாதுகாப்பு தேவையில்லை. அடிக்கடி பைலை அணுகும்போது ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டு உள்ளிடாமல் இருக்க. ஆவணத்தை சக ஊழியர்கள் அல்லது மாணவர்களுடன் எளிதாகப் பயன்படுத்துவதற்காகப் பகிரும்போது நீங்கள் பாஸ்வேர்டை நீக்கலாம்.

1. அடோப் அக்ரோபட் ப்ரோ (Adobe Acrobat Pro)

முக்கியமான ஆவணங்களுக்கு இது மிகவும் நம்பகமான கருவியாகும். பாஸ்வேர்டு பாதுகாப்பு உள்ள PDF ஃபைலை அடோப் அக்ரோபட் ப்ரோவில் திறக்கவும். ஃபைலைத் திறக்க பாஸ்வேர்டை உள்ளிடவும். File > Properties > Security என்பதற்குச் செல்லவும். "Security Method" என்பதன் கீழ், No Security என்பதைத் தேர்வு செய்யவும். ஃபைலை சேமிக்கவும். இப்போது அந்த ஃபைலை பாஸ்வேர்டு இல்லாமல் திறக்கலாம். இந்த முறை ஆவணத்தின் நம்பகத்தன்மையைக் காக்கிறது.

2. ஆன்லைன் PDF அன்லாக் டூல்ஸ்

Smallpdf, iLovePDF, PDF2Go போன்ற பல நம்பகமான ஆன்லைன் தளங்கள் PDF பாஸ்வேர்டை நீக்கும் சேவையை வழங்குகின்றன. பாஸ்வேர்டு பாதுகாப்பு உள்ள PDF ஃபைலை அந்த இணையதளத்தில் பதிவேற்றவும். கேட்கப்படும்போது பாஸ்வேர்டை உள்ளிடவும். இணையதளம் ஃபைலை அன்லாக் செய்து, பாஸ்வேர்டு நீக்கப்பட்ட புதிய ஃபைலை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும். மிகவும் ரகசியமான ஃபைல்களை ஆன்லைனில் பதிவேற்றுவதைத் தவிர்க்கவும். முக்கியமான தகவல்களுக்கு ஆஃப்லைன் மென்பொருளைப் பயன்படுத்துவதே நல்லது.

3. கூகுள் குரோம் ஷார்ட்கட்

Advertisment
Advertisements

நீங்கள் ஏற்கனவே ஒருமுறை பிடிஎஃப் பைலைத் திறந்திருந்தால், கூகுள் குரோம் ஒரு விரைவான வழியை வழங்குகிறது. பாஸ்வேர்டை உள்ளிட்டு, பிடிஎஃப் பைலை குரோம் பிரவுசரில் திறக்கவும். பிரிண்ட் (Print) ஆப்ஷனை (Ctrl+P) கிளிக் செய்யவும். சேமிக்கும் இடமாக "Save as PDF" என்பதைத் தேர்வு செய்யவும். புதிய ஃபைலைச் சேமிக்கவும். இப்போது இந்த ஃபைலில் பாஸ்வேர்டு இருக்காது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: