ஆண்ராய்டு போனில் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால், ஐபோனிலும் ஸ்டோரேஜ் பிரச்சனை உள்ளது. ஐபோனில் பலவித வசதிகள் உள்ளன. எளிதில் ஹேக் செய்து விட முடியாது. உயர்தர சாப்ட்வேர் வசதிகள் அதில் உள்ளன.
ஐபோன் விலையுயர்ந்த, உயர்தர தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் ஸ்டோரேஜ் பிரச்சனையை பயனர்கள் எதிர்கொள்கின்றனர். (External storage) ஸ்டோரேஜ் வசதி ஐபோனில் இல்லை. ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளும் ஆப்ஷன் ஐபோனில் இல்லை. இது பயனர்களுக்கு பிரச்சனையாக உள்ளது.
ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிவிட்டால் போட்டோ எடுக்க முடியாது. வேறுஎந்த தகவலும், செயலிகளையும் டவுன்லோட் செய்ய முடியாது. ஸ்டோரேஜ் பிரச்சனையா சரிசெய்ய சில டிப்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம். முதலில் தேவையற்ற ஆப்ஸ், புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, தகவல்களை டெலிட் செய்ய வேண்டும்.
Cache கிளியர் செய்யுங்கள்
செட்டிங்ஸ் மெனுவில் safari-க்கு சென்று கிளிக் செய்ய வேண்டும். ஹிஸ்டரி (history) மற்றும் வலைத்தள தரவின் கீழ் உள்ள கிளியர் ஹிஸ்டரி (clear history) என்பதை செலக்ட் செய்து ஹிஸ்டரியை கிளியர் செய்யவும்.
பயன்படுத்தாத செயலியை ஆஃப்லோட் ( unused apps offload) செய்யுங்கள்
ஐபோனிலிருந்து பயன்படுத்தாத செயலியை ஆஃப்லோட் செய்ய முடியும். செயலி நீக்குவது போன்றது அல்ல. ஆஃப்லோடிங் என்பது, நீங்கள் பயன்படுத்தாக செயலியை போனிலிருந்து தற்காலிகமாக அகற்றி, உங்கள் தரவு பாதுகாப்பாக வைக்கப்படும். மீண்டும் செயலியை டவுன்லோட் செய்யும் போது பழைய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆஃப்லோடிங் தற்காலிகமாக செயலியை நீக்குவது போன்றதாகும்.
ஸ்டோரேஜ் செக் செய்வது எப்படி?
செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று, General என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, ஸ்டோரேஜூக்கு செல்லவும். அதில் நீங்கள் எவ்வளவு ஸ்டோரேஜ் பயன்படுத்தி இருக்கிறீர்கள், எவ்வளவு மீதம் உள்ளது என்பதைக் காண்பிக்கும்.
ஆஃப்லோட் செய்வது எப்படி?
பயன்படுத்தாத செயலியை ஆஃப்லோட் செய்யும்போது, செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டு, ஸ்டோரேஜ் கிடைக்கும். ஆஃப்லோட் செய்வதற்கு, செட்டிங்ஸில் General ஆப்ஷனை தேர்வு செய்து, ஸ்டோரேஜ் பகுதிக்கு செல்ல வேண்டும். "ஆஃப்லோட் ஆப்" எனக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்தால், செயலி ஆஃப்லோட் ஆகிவிடும். இது மேனுவலாக செய்யும் முறை.
ஆட்டோமேட்டிக்காவும் இதை செய்ய முடியும். அதற்கு செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று தகுந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், செயலி நீண்ட நாட்களாக பயன்படுத்தாத போது ஆட்டோமேடிக்காக ஆஃப்லோட் ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.