உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்படும் நேவிக்கேஷன் செயலியாக கூகுள் மேப்ஸ் உள்ளது. கூகுள் நிறுவனம் செயலியை தற்போது பல்வேறு வசதிகளுடன் அப்டேட் செய்து வருகிறது.
இந்நிலையில், நீங்கள் செல்லும் வழியில் சாலை சோசமாக இருந்தால், அங்கு சாலை பணிகள் ஏதும் நடைபெற்றுக் கொண்டிருந்தால் அல்லது போக்குவரத்து மாற்றம் ஏதும் செய்யப்பட்டிருந்தால் அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் மேப்ஸில் அப்டேட் செய்யலாம்.
கூகுள் மேப்ஸில் அப்டேட் செய்ய, 1. கூகுள் மேப்ஸ் ஓபன் செய்து உங்கள் லொக்கேஷனை கொடுக்கவும். 2. இப்போது ஸ்டார்ட் நேவிக்கேஷன் கொடுத்து கீழே இருந்து ஸ்வைப் செய்தால் உங்கள் வழித்தடம் வரும்.
3. இங்கே "Add a report" பட்டனை கொடுக்கவும். 4. இதில் நீங்கள் வந்த வழியில் சாலையில் பிரச்சனைகள் அதாவது, சாலை மோசம், சாலையில் செல்ல முடியாது என்ற ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதைக் குறிப்பிடவும். 5. அந்த சாலையின் புகைப்படம் இருந்தால் அதையும் அப்லோடு செய்யலாம். இப்போது இது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் இப்போது Street வியூ, satellite imagery போன்ற வசதிகளை ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.