/tamil-ie/media/media_files/uploads/2023/07/Google-Maps-Express-Photo.jpg)
Google Maps
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்குவது, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு ஏற்பட்டு வருகிறது. வட மாநிலங்கள் குறிப்பாக இமாச்சலில் நேற்று பெய்த கனமழையால் பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. சாலைகள் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாலை சேதம், சாலை பணிகள் குறித்த தகவல்களை கூகுள் மேப்ஸ் கொண்டு மற்ற வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரியப்படுத்துவது குறித்து இங்கு பார்ப்போம்.
கூகுள் மேப்-ல் ரிப்போட் செய்வது எப்படி?
சாலை விபத்து, சீரமைப்பு பணிகள், சேதம் குறித்து கூகுள் மேப்-ல் ரிப்போட் செய்யலாம்.
- கூகுள் மேப்ஸ் பக்கம் சென்று உங்கள் லொக்கேஷன் செலக்ட் செய்யும் பக்கம் வந்து கீழ் இருந்து மேலே ஸ்வைப் செய்யவும். அப்போது ‘Add a report’ என்ற பட்டனை வரும்.
- அதைக் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பதிவிடலாம். கூகுள் அவ்வழியாக பயணிக்கும் பயனர்களுக்கு இது குறித்து அலர்ட் மெசேஜ் அனுப்பும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Google-Maps-Add-Report.jpg)
Mappls-ல் ரிப்போட் செய்வது எப்படி?
- Mappls செயலியை ஓபன் செய்து கீழே இருக்கும் ‘Quick Access’ செக்ஷன் செய்து ‘Post on Map’ ஐகான கிளிக் செய்யவும்.
- இப்போது இங்கு Traffic, Safety and Traffic Violation எனப் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ரிப்போட் செய்யவும்.
- அடுத்து வலப்புறத்தில் உள்ள ‘Search or choose location from map’ என்பதை கிளிக் செய்து எடிட் பட்டன் கொடுக்கவும். அதில் எந்த லொக்கேஷனில் பாதிப்பு உள்ளது என்பதை செலக்ட் செய்யவும். பயனர் சாலை பாதிப்பு குறித்தான தகவல், புகைப்படங்களை குறிப்பிட்டு பதிவிடலாம். மேலும் பயனர் தங்களது பெயர் குறிப்பிடாமலும் தெரியப்படுத்தலாம்.
- தகவலை பதிவு செய்த பிறகு ‘Done’ பட்டன் கொடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.