/tamil-ie/media/media_files/uploads/2023/03/New-Project86.jpg)
இந்தியாவில் ரயில் சேவையை ஏராளமானவர்கள் பயன்படுத்துகின்றனர். நாள்தோறும் ஏராளமானவர்கள் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தொலைத் தூரம் செல்பவர்கள் அந்த ஊர்களுக்கு ரயில் முன்பதிவு செய்து பயணிப்பர். இந்தியன் ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், செயலி மூலம் முன்புதிவு செய்து பயணிக்கலாம். இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் யூசர் ஐ.டி, பாஸ்வேர்ட் வழங்கப்படும். இதில் பாஸ்வேர்ட் மறந்துவிட்டீர்கள் என்றால் அதை ரீ-செட் செய்வது குறித்து பார்ப்போம்.
இ-மெயில் மற்றும் மொபைல் எண் மூலம் உங்கள் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு பாஸ்வேர்ட் மீண்டும் செட் செய்யலாம்.
இ-மெயில் மூலம் செய்வது எப்படி?
1. முதலில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் சென்று, Forgot Password லிங்க் கொடுக்கவும்.
2. இப்போது உங்கள் யூசர் நேம் கொடுத்து அடுத்து ஸ்டெப் செல்லவும்.
3. அடுத்து நீங்கள் செக்யூரிட்டி question பக்கம் செல்வீரர்கள். இதில் நீங்கள் கணக்கு தொடங்கும் போது கொடுத்த கேள்வி இடம்பெறும் அதற்கு பதில் அளிக்க வேண்டும்.
4. இதற்கு சரியான பதில் அளித்த பின், ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் இருந்து பாஸ்வேர்ட் ரீ-செட் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படும்.
5. அதை வைத்து புதிய பாஸ்வேர்ட் செட் செய்து கொள்ளலாம்.
இதே போன்று பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலமும் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு பாஸ்வேர்ட் ரீ-செட் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.