யு.பி.ஐ பின் நம்பர் மாற்ற ஏ.டி.எம் கார்டு தேவைப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆதார் அட்டை பயன்படுத்தி அதை மாற்றலாம்.
ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் இதை செய்யலாம். நாடு முழுவதும் தற்போது யு.பி.ஐ பரிவர்த்தனைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் பயன்படுத்தி யு.பி.ஐ பரிவர்த்தனைகளை எளிதாக செய்ய முடியும். அந்த வகையில்
யு.பி.ஐ பின் நம்பர் மறந்து விட்டீர்கள் என்றால் அல்லது அதை மாற்ற வேண்டும் என்றால் ஆதார் கார்டு எண் வைத்தே எளிதாக செய்யலாம். முன்னதாக இதற்கு ஏ.டி.எம் கார்டு தேவைப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆதார் அட்டை பயன்படுத்தியே செய்யலாம்.
- கூகுள் பே, போன் பே போன்ற யு.பி.ஐ ஆப் ஓபன் செய்யவும்.
2. "Bank Account" என்ற ஆப்ஷன் பக்கம் சென்று வங்கி கணக்கு இணைக்கப்பட்ட அக்கவுண்ட் பக்கம் செல்லவும்.
3. இப்போது "Reset UPI PIN" ஆப்ஷன் கொடுக்கவும்.
4. அடுத்தாக உங்கள் ஆதார் அட்டை எண்ணின் முதல் 6 இலக்க எண்ணை கொடுத்து வெரிஃபை செய்யவும்.
5. ஆதார் இணைக்கப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்படும். அதை உள்ளிடவும்.
6. இப்போது புதிய யு.பி.ஐ எண்ணை உள்ளிட வேண்டும்.
7. புதிய யு.பி.ஐ எண்ணை Confirm செய்து ப்ராசஸ் செய்து முடிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“