மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இது மிகவும் பிரபலமான சமூக வலைதளம் ஆகும். இதில் மெசேஜ் அனுப்பலாம், போஸ்ட் பதிவிடலாம். உலகில் உள்ள மக்களிடம் கலந்துரையாடலாம். அந்த வகையில் தவறுதலாக நீங்கள் உங்கள்
பேஸ்புக் போஸ்டை டெலிட் செய்து விட்டால் அதை மீண்டும் மீட்கலாம்.
பொதுவாக பேஸ்புக் பதிவுகளை உடனடியாக டெலிட் செய்து விடாது. பதிலாக, நீக்கப்பட்ட பதிவுகளை
த்ராஸில் (Trash) 30 நாட்கள் சேமித்து வைக்கும். இந்த நேரத்தில், உங்கள் பேஸ்புக் த்ராஸில் இருந்து பதிவுகளை மீட்கலாம்.
அதை எப்படி செய்வது?
- முதலில் உங்கள் போன் அல்லது டெஸ்க்டாப்பில் பேஸ்புக் பக்கத்தை ஓபன் செய்யவும்.
2. உங்கள் profile page பக்கம் சென்று மூன்று புள்ளி உள்ள மெனு ஐகானை கிளிக் செய்யவும்.
3. இதில் “Archive” என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
4. இப்போது “Trash” or “Recycle Bin” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
5. இங்கு நீங்கள் சமீபத்தில் டெலிட் செய்த போஸ்டைகளை காணலாம். உங்களுக்கு வேண்டிய பதிவை ரீஸ்டோர் செய்யலாம்.
6. “Restore” என்ற பட்டனை கொடுத்து அந்த போஸ்டை உங்கள் பக்கத்தில் மீண்டும் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“