டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் வெப் யூஸ் செய்பவர்களின் எண்ணிக்கை, அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. லேப்டாப்பில் வேலை செய்பவர்கள் நண்பர்களுடன் உரையாடவும், அலுவலக உரையாடல்களுக்காகவும் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த தொடங்கினர். பலரும், அதனை எளிதாக அணுகும் வகையில் சிஸ்டம் பிரவசரில் மார்க் செய்து வைத்திருப்பார்கள். பக்கத்து டேப்பில் திறந்திருக்கும் வாட்ஸ்அப் சாட்டை எளிதாக மற்றவர்களிடமிருந்து மறைக்க முடியாது. பலரும் வாட்ஸ்அப் வெப் லாகின் தானாகவே வரும்படி செட்டிங்கஸ் செய்துவைத்திருப்பார்கள். ஸ்மார்ட்போனை போல், டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் வெப் செயலிக்கு அவ்வளவு பிரைவசி கிடையாது.
ஆனால், கூகுள் குரோமில் ‘WA Web Plus for WhatsApp’ என்கிற Extension மூலம், நீங்கள் லேப்டாப்பில் பயன்படுத்தும் வாட்ஸ்அப் வெப்பில் புதிய வசதிகளை அணுபவிக்கலாம். உதாரணமாக, டெலிட் செய்த மெசேஜ்களை பார்ப்பது, ஆன்லைன் ஸ்டேட்ஸ் மறைப்பது, மெசேஜ் படிப்பதை ஆப் செய்வது, , கான்டக்ட் நம்பர், புரோபைல் பிக்சர், புதிய மெசேஜ்களை Blur செய்து வைக்கும் வசதியும் உள்ளது.
இந்த Extension மூன்றாம் தரப்பு கருவியாகும். எனவே, உங்கள் வாட்ஸ்அப் தகவலை மற்றவர்களுடன் பகிர விரும்பாதோர், இதனை பயன்படுத்த வேண்டாம்.
WA Web Plus Extension இன்ஸ்டால் செய்யும் வழிமுறை
முதலில் குரோம் கூகுள் ஸ்டாரில், Extension செக்ஷனுக்கு செல்ல வேண்டும்.
அதில், “WA Web Plus for WhatsApp” என்கிற Extension-ஐ தேடி, அதனை கிளிக் செய்து ‘Add to Chrome’ பட்டன் கொடுக்க வேண்டும். அவ்வளவு தான், உங்கள் கூகுள் குரோமில் அந்த Extension இன்ஸ்டால் ஆகிவிடும்.
அதனை பயன்படுத்துவது எப்படி?
Extension இன்ஸ்டால் ஆனதும், Setting Page செல்ல வேண்டும். அதில், ‘Extensions’ button கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து தோன்றும் திரையில், வாட்ஸ்அப் ஐகானை தேடி, கிளிக் செய்ய வேண்டும். அதன் Settings page ஐ ஓப்பன் செய்தால், ‘Privacy’ and ‘Customisations’செக்ஷனில் ஏரளாமான விருப்பங்கள் திரையில் தோன்றும்.
அவற்றில் , சிலதை பயன்படுத்த சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், Typing Status-ஐ மறைப்பது, ஆன்லைன் ஸ்டேட்ஸ் மறைப்பது, டெலிட் செய்த மெசேஜை படிப்பது போன்ற வசதிகளை இலவசமாக அணுகலாம். தேவைப்படும் விருப்பங்களை, டிக் செய்ய வேண்டும்.
அடுத்ததாக, பிரவசரில் வாட்ஸ்அப் வெப் ஓப்பன் செய்தால், நீங்கள் Extension-இல் செய்த மாற்றங்களை ரியல் டைமில் காணலாம். யாராவது, மெசேஜ் அனுப்பி அதனை டெலிட் செய்தாலும், அதனை காண முடியும்.
அதே போல், மேலே உள்ள படத்தை போல், கான்டக்ட் விவரம், புரோபைல் பிக்சர்களை blur செய்து வைக்கலாம். இதே போன்ற, பல விருப்பங்களை Extension-இல் தேர்வு செய்து உபயோகிக்கலாம். ஒருவேளை அந்த வசதி வேண்டாம் என தோன்றினால், Extension-க்கு சென்று அதனை அன்டிக் செய்துக்கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.