Whatsapp Status Download Tamil News : வாட்ஸ்அப் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஸ்டேட்டஸ்’ அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல், ஸ்டேட்டஸை பதிவேற்ற வாட்ஸ்அப்பையும் பயன்படுத்தும் நிறையப் பேர் உள்ளனர். உங்கள் நண்பர்களின் ஸ்டேட்டஸை ஒரு நினைவகமாக அல்லது வேறு ஏதேனும் ஒரு நோக்கத்திற்காகச் சேமிக்க நீங்கள் நினைக்கும் நேரங்கள் பல இருந்திருக்கலாம். புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் வீடியோக்களுக்கு நீங்கள் மூன்றாம் தரப்பு பயன்பாட்டை நம்ப வேண்டியிருக்கும்.
ஸ்டேட்டஸை பதிவிறக்க வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்காது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பயனர்களின் சுயவிவரப் படத்தைப் பதிவிறக்கம் செய்ய வாட்ஸ்அப் அனுமதித்தது. ஆனால், ஒரு நபரின் தனியுரிமையை மதிக்க இந்த அம்சம் அகற்றப்பட்டது. பயனர்கள் முதலில் ஸ்டேட்டஸை பதிவிறக்குவதற்கு முன்பு தனிநபரின் அனுமதியைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
30 விநாடி வீடியோவை ஸ்டேட்டஸாக போஸ்ட் செய்ய வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு பெரிய ஃபைலை பதிவேற்ற முயற்சி செய்தால், வாட்ஸ்அப் அதன் அளவை குறைத்துக் காண்பிக்கும். இந்த செய்தி சேவை உங்களுக்குத் தனியுரிமை அல்லது பிரைவேட் விருப்பத்தையும் வழங்குகிறது. ஸ்டேட்டஸ் பிரிவைப் பார்வையிடுவதன் மூலம் இந்த விருப்பத்தைக் காண்பீர்கள்> மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்யவும்> தனியுரிமை நிலை. இங்கே, ‘எனது தொடர்புகள்,’ ‘எனது தொடர்புகள் தவிர’ மற்றும் ‘மட்டுமே பகிரவும்’ உள்ளிட்ட மூன்று நிலைகளைப் பெறுவீர்கள்.
உங்கள் நண்பர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை எவ்வாறு சேமிப்பது
ஸ்டெப் 1: முதலில், நீங்கள் ‘ஸ்டேட்டஸ் சேவர் - வாட்ஸ்அப்பிற்கான பதிவிறக்கம்’ எனப்படும் மூன்றாம் தரப்பு பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்.
ஸ்டெப் 2: பயன்பாட்டைத் திறந்து, உங்கள் தொலைபேசியின் சேமிப்பிடத்தை அணுக அனுமதி வழங்கவும்.
ஸ்டெப் 3: இப்போது, உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பதிவிறக்க அல்லது சேமிக்க, செய்தியிடல் பயன்பாட்டில் முதலில் அந்த ஸ்டேட்டஸை பார்த்திருக்க வேண்டும். ஸ்டேட்டஸை பார்த்தவுடன், நீங்கள் ஸ்டேட்டஸ் சேவர் பயன்பாட்டைத் திறக்க வேண்டும்.
ஸ்டெப் 4: பயன்பாட்டைத் திறந்தபின், நீங்கள் வாட்ஸ்அப்பில் பார்த்த அனைத்து ஸ்டேட்டஸ்களையும் காண்பீர்கள். இப்போது, நீங்கள் செய்ய வேண்டியது, சேமிக்க விரும்பும் வீடியோ அல்லது படத்தை க்ளிக் செய்து, கீழே உள்ள பதிவிறக்க ஐகானை அழுத்தவும். வலதுபுறத்தில், ஷேர் ஐகானும் உள்ளது. அதை க்ளிக் செய்தால் வாட்ஸ்அப் நண்பர்கள், ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிற தளங்களுடன் ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொள்ள விருப்பம் வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.