உங்கள் தொலைபேசியில் குறுஞ்செய்திகளை எவ்வாறு ஷெடியூல் செய்வது?

How to schedule text messages on your android phone Tamil News 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே நீக்கும் விருப்பத்தையும் இந்த தளம் வழங்குகிறது.

How to schedule text messages on your android phone Tamil News
How to schedule text messages on your android phone Tamil News

How to schedule text messages on your android phone Tamil News : பயனர்கள் தங்கள் குறுஞ்செய்திகளைத் தட்டச்சு செய்ய விரும்பலாம் ஆனால் மறுமுனையில் உள்ள நபரைத் தொந்தரவு செய்யாமல் இருக்க உடனடியாக அனுப்புவதைத் தவிர்க்கும் நேரங்கள் இருக்கும். இதுபோன்ற நேரத்தில், உங்கள் குறுஞ்செய்தியைக் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பத் திட்டமிட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மூன்றாம் தரப்பு செயலிகள் தேவைப்பட்டாலும் கிட்டத்தட்ட எல்லா ஆண்ட்ராய்டு தொலைபேசிகளும் இதைச் செய்ய உங்களை அனுமதிக்கின்றன. கூகுள் மெசேஜஸ், திட்டமிடல் செய்திகள் மற்றும் automatic categorising of texts உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. பின்னாளில் அனுப்பப்படும் செய்திகளை எவ்வாறு ஷெடியூல் செய்யலாம் என்பது இங்கே.

கூகுள் செய்திகளைப் பயன்படுத்தி ஆண்டிராய்டில் உரைச் செய்திகளை எவ்வாறு ஷெடியூல் செய்வது?

1. மெஸேஜ் ஐகானை க்ளிக் செய்வதன் மூலம் செய்திகள் பயன்பாட்டைத் தொடங்கவும்

2. ஒரு உரைச் செய்தியை எழுதுங்கள்

3. அம்பு வடிவிலான அனுப்பு பட்டனை க்ளிக் செய்து பிடிக்கவும். “அனுப்புவதற்கான அட்டவணை” சாளரம் இப்போது தோன்றும்.

4. நீங்கள் செய்தி அனுப்ப விரும்பும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். பல முன்னமைக்கப்பட்ட நேரங்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது “தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்” என்பதை க்ளிக் செய்து நீங்கள் அனுப்ப விரும்பும் சரியான நேரத்தைத் தேர்வு செய்யவும்.

5. அனுப்பு பட்டனை க்ளிக் செய்யவும். இது ஒரு திட்டமிடப்பட்ட உரை என்பதைக் குறிக்கச் சிறிய கடிகார ஐகானைக் கொண்டுள்ளது.

கூகுள் செய்திகளில் இந்த அம்சத்திற்கான விருப்பத்தை நீங்கள் காணவில்லை எனில், நீங்கள் கூகுள் பிளே ஸ்டோர் செயலியைத் திறந்து, கூகுள் செய்திகளைக் கண்டறியலாம் மற்றும் தயாரிப்பு பக்கத்தில் உள்ள பீட்டா புரோகிராமை தேர்ந்தெடுக்கலாம்.

இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தும் போது, ​​செய்திகள் தானாகவே பல்வேறு வகைகளாக வரிசைப்படுத்தப்படுகின்றன. எனவே, நீங்கள் எளிதாக உரையாடல்களைத் தேடலாம். கூடுதலாக, உங்கள் ஒருமுறை கடவுச்சொற்களை (OTP-கள்) நீங்கள் பெற்ற 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே நீக்கும் விருப்பத்தையும் இந்த தளம் வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to schedule text messages on your android phone tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com