பல நேரங்களில் குறிப்பாக கூட்ட நெரிசலான இடங்களில் கார், டூ வீலர் நிறுத்துவதும், அதை மீண்டும் கண்டுபிடிப்பதும் கடும் சிரமமாக இருக்கும். முறையான பார்க்கிங் வசதி இல்லாத இடங்களில் இது நிகழும்.
பண்டிகை காலங்களில் ஷாப்பிங் செல்லும் போது இது ஏற்படும். நாம் ஒரு இடத்தில் இருப்போம். வண்டியை மற்றொரு இடத்தில் நிறுத்தி வைத்திருப்போம். கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும். இந்நிலையில், கூகுள் மேப்ஸின் பார்க்கிங் லொக்கேஷன் வசதி மூலம் இது எளிதாகிறது.
1. கூகுள் மேப்ஸ் ஓபன் செய்து "Explore" பக்கம் செல்லவும். 2. அங்கு சென்றால் ப்ளூ டாட் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஷேர் லொக்கேஷன் பக்கத்தில் "Save parking" ஆப்ஷன் இருக்கும். அதை கொடுத்து லொக்கேஷனை Save செய்யவும்.
மீண்டும் கண்டுபிடிப்பது எப்படி? 1. மீண்டும் கூகுள் மேப்ஸ் ஓபன் செய்யவும். 2. Zoom out செய்து ‘You parked here’ ஆப்ஷனை பார்க்கவும்.
3. அதை கண்டுபிடித்த உடன் கிளிக் செய்து எப்போதும் போல் directions கொடுத்து அது வழிகாட்டும் இடத்திற்கு நடந்து சென்றால், உங்கள் பார்க்கிங் லொக்கேஷன் கிடைத்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.